பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று வாசகரை எதிர்பார்க்க வைக்கிற சஸ்பென்ஸ்' கொண்டு முடிய வேண்டும். அப்போது தான் திடுமெனத் தொடரும் என அச்சிட்டு, வாசகருக்குக் கிளர்ச்சி தர முடியும். அப்படியிருந்தால் தான் வாசகர் அடுத்த இதழை ஆவலோடு எதிர்பார்த்து, ஆசையோடு வாங்குவார். தொடர்ந்து அந்தப் பத்திரிகையை வாங்கிக் கொண்டிருப்பாள்.

தமிழில் முதன் முதலாகத் தொடர்கதை எழுதிப் பிரசுரித்த பெருமை பெருங்குளம் அ. மாதவய்யா என்ற படைப்பாளிக்கே உரியது. சென்னையிலிருந்து வெளி வந்த விவேக சிந்தாமணி’ என்ற பத்திரிகையில் அவளுடைய நாவல் சாவித்திரி சரித்திரம் தொடர்கதை வாக அச்சிடப்பட்டது.

அ. மாதவய்யா தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி களான மூவரில் ஒருவர் ஆவார். (மற்றவர்கள்: மாயூரம் வேததாயகம் பிள்ளை, வத்தலக்குண்டு ராஜமய்யர்.) அவர் எழுதிய பத்மாவதி சரித்திரம் பிரசித்தி பெற்றது. சமூக சீர்திருத்தம், மகளிர் விடுதலை, தனி மனித மேம்பாடு முதலிய குறிக்கோள்களுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்ட அவர் குசிகர் குட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் பல கதைகளும் எழுதியிருக்கிறார்.

மாதவய்யா எழுதிய தொடர்கதை பத்திரிகையில் முழுமையாகப் பிரசுரம் பெறவில்லை. அரைகுறையாக நின்று போயிற்று. பின்னர் அவர் அந்த ‘சாவித்திரி

இ வாசகர்களும் விமர்சகர்களும் 68