பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசகர்களுக்குப் பிரயாணக் கட்டுரைகள் மீது ஒரு ரசனையையும் ஈடுபாட்டையும் உண்டாக்கியவர் கல்கி" ரா. கிருஷ்ணமூர்த்தி என்று தான் சொல்ல வேண்டும்.

1930 களிலேயே கல்கி, ஆனந்த விகடனில் பயரைக்கட்டுரைகளை ரசமாக எழுதினார். அநேக வாரங்கள் தொடர்ந்து வரும்படி அவர் கல்கத்தா பிரயாணம் பற்றியும், இந்தியாவில் முக்கியமான சில இடங்களுக்குப் போய்வந்தது பற்றியும் நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக அவ்வப்ப்ோது எழுதினார். பிறகு, அவரும் ஓவியர் மாலியும் இலங்கைக்குப் போய் வந்தது குறித்து விரிவாக எழுதினார். தொடர்கட்டுரையாகப் பிரசுரம் பெற்ற அவற்றை வாசகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

அதன் பிறகு பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிக்கிற வழக்கத்தையும் வாரப் பத்திரிகைகள் மேற் கொண்டு விட்டன.

1930 களுக்கு முன்னரும் முப்பதுகளிலும் வாசகர் களை வெகுவாக வசீகரித்த நாவல்களை எழுதிக் கொண்டிருந்த வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல் களை தொடர்கதை ரீதியில் பிரசுரிப்பதற்காகவே 'மனோரஞ்சிதம்' என்ெறாரு மாதப் பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. வடுவூர் நாவல்களைப் புத்தகங்களாக வெளியிட்டு வந்த பிரசுர நிறுவனம் தான் அந்த இதழையும் நடத்தியது. அது சிறிது காலமே நடந்தது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 72