பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தப் போக்கைக் கையாண்டு தங்களை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு வேலை செய்தவர்கள் பத்திரிகைகள், புத்தகங்கள் பிரசுரிக்கும் துறையில் அந்நாட்களில் ஈடுபட்டிருக்கவில்லை.

வாசக மனசின் பலவீனங்களைப் புரிந்து கொண்டு, சூதசட்ட ரீதியில் போட்டிப் பரிசுத் திட்டங்களைப் பரப்பி, பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் விகடன்' ஈடுபட்டு வெற்றியும் கண்டது என்பது ஒரு உண்மை. அதே சமயத்தில், வாசகர்களின் அறிவையும் ரசனைத் திறனையும் வளர்க்கக் கூடிய விதத்தில் உள்ளடக்கத்தை அது அமைத்து வந்தது என்பது மற்றொரு உண்மை ஆகும்.

விகட மனோபாவத்துக்கும் நோக்கிற்கும் உரிய முறையில் கதைகள் கட்டுரைகளை ஆனந்த விகடன்’ பிரசுரித்த சமயத்திலேயே, அவை தரம் உடையனவாக, வாசகர்களின் பண்பையும் ரசனையையும் வளர்க்கக் கூடிய தரத்தில் இருக்கும்படி கவனித்துக் கொண்டது. இலக்கிய உணர்வையும் ஓரளவுக்கு அது வளர்த்து வத்தது.

கம்ப சித்திரங்கள்' என்ற த ைலப் பி ல் கம்ப ராமாயணத்தின் அற்புதக் காட்சிகளை பி. பூரீ, சுவையாக ல்ர்ணித்து எழுதினார். இக்கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.

சங்கப் பாடல்கள், பழம் தமிழ் செய்யுள்களிலிருந்து தேர்த்து எடுத்த பாடல்களுக்கு, அட்டையில் ஒவியம் வெளியிட்டு, உள்ளே அழகான விளக்கக் கட்டுரைகளை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 24