பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சியாக அமையலாம். ஆனாலும், சரியான விடையைக் கண்டு பிடிப்பது சிரமமான காரியமாகவே இருக்கும்.

பத்திரிகைகளில் தொடர்கதை வெளியிடும் போக்கு வெகு காலமாகவே, உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அனைத்து மொழிகளிலும், சகல விதமான பத்திரிகைகளும், தொடர்கதைகளைப் பிரசுரிக்கின்றன.

பிரபல நாவலாசிரின்களின் பல படைப்புகள் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து, பின்னர் தான் புத்தகங்களாகப் பிரசுரம் புெற்றுள்ளன.

சார்லஸ் டிக்கன்ஸ் நாவல்கள் அநேகம் அவரது காலத்தில் பத்திரிகைகளில் தொடர்கதையாக வெளிவந்தவை தான்.

உலக இலக்கியத்தில் கீர்த்தி பெற்றவர்களாக விளங்கும் ரஷ்ய எழுத்தாளர்களான டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களது படைப்புகள் கூட அவர்கள் வாழ்நாளில் பத்திரிகைத் தொடர்கதைகளாகப் பிரசுரம் பெற்றதை வரலாறு கூறுகிறது.

இது ஒரு உதாரணம் தான். பத்திரிகைகள், எல்லா நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும், தொடர்கதை பிரசுரிப்பதை ஒரு மரபு ஆக்கிவிட்டன.

அதைப் பின்பற்றி தமிழ் பத்திரிகைகளும் தொடர்

கதை வெளியிடுவதில், ஆதிநாள் முதலே ஆர்வம் காட்டி வருகின்றன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 66