பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகையை நடுநிலை இலக்கிய ஏடு ஆகவே வெளியிட்டு வந்தார். முற்போக்கு இலக்கியவாதிகளின் எழுத்துக்களோடு: மறுமலர்ச்சி இலக்கியவாதிகளின் எழுத்துக்களையும் ஏற்றுப் பிரசுரித்தார்.

அதே காலத்தில், தொ. மு. சி. ரகுநாதன் திருநெல்வேலியிலிருந்து சாந் தி' பத்திரிகையை வெளியிட்டு வந்தார். அதில் தி. க. சிவசங்கரன், முற்போக்கு இலக்கியப் பார்வையோடு, புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதிக் கொண்டிருந்தார்.

இலக்கியவாதிகள் புதுமைப் பித்தன்ை ஒரே அடியாகப் புகழ்ந்து வந்தது தி. க. சி.க்குப் பிடிக்கவில்லை. அது முறையல்ல; புதுமைப் பித்தன் படைப்புகள் நியாயமான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்; பு. பி. கதைகளில் உயர்ந்த, படைப்புகளும் உண்டு, சாதாரணமானவையும் உண்டு. மனிதாபிமானத்தோடும், சமூக தோக்குடனும், முற்போக்காகச் சில கதைகளைப் படைத்துள்ள அவரே பிற்போக்குத்தனமாகவும் நசிவுத் தன்மையோடும் பல கதைகளை எழுதியிருக்கிறார். அவர் எழுத்தில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு. அவரை தனிப் பெரும் சிறுகதை எழுத்தாளராகப் புகழ்ந்து கொண்டிருப்பதும், அவரது சமகாலச் சிறந்த படைப்பாளிகளான இதர மணிக்கொடி’ ೯rg55767fಹಂಗಿಸಿ திறமையை இருட்டடிப்பு செய்வதும் తాగిuుణు: எல்லோரது எழுத்துக்களையும் முறையாக - செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வீர வணக்கம் வேண்டாம் என்ற கட்டுரையை தி.க. சி. சரஸ்வதி'

யில் எழுதினார்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 152