பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்வுக்காக எழுதுவது, பண்பாட்டு உயர்வுக்காகவும் சமூக மேப்பாட்டுக்காக்வும் படைப்புகளை உருவாக்குவது; சீர்திருத்த நோக்கத்தைப் புகுத்துவது போன்ற எதுவும்கிடையாது; இருக்கவும் கூடாது. இது சுத்த இலக்கிய வாதிகள் (அல்லது, தனி இலக்கிய வாதிகள்) கொள்கை ஆகும்.

1930 களிலும் 40 களிலும் இவர்கள். "மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று பெயர் பெற்றிருந்தனர்.

இந்த சுத்த அல்லது 'தனி' இலக்கிய (Pure Literature) போக்கிற்கு முற்றிலும் நேர்மாறானது "முற்போக்கு இலக்கிய நோக்கு.

வாழ்க்கை உண்மைகளை, - மனித மேன்மை களை மட்டு மல்லா து மனித பலவினங்களையும் குரூரங்களையும் கோளாறுகளையும் குறைபாடுகளையும், மனித உள்ளத்தின் பல்வேறு இயல்புகளையும் - எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும்; எதையும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் ; ஆனால் எழுதுவதை கலை அழகுடன் எடுத்துக் கூற வேண்டும். இது மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் கருத்து ஆகும்.

அப்படி வாழ்க்கையை உள்ளபடி பிரதிபலிப்பது மட்டும் இலக்கியத்தின் வேலை இல்லை. வாழ்க்கையில் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் அனுபவிக்கிற கொடுமைகள், துயரங்களை மட்டும் பிரதிபலிப்பது போதாது; இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். உழைப்பவர்கள் உயர முடியாமல் வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்

வாசகர்களும் விமர்சகர்களும் 150