பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதப்பட்டிருக்கிறது: நாவல் என்றால் அதன் கதை இப்படி இப்படி அமைந்துள்ளது என்ற தன்மையில் சில வரிகள் எழுதப்படுவது தான்.

பார்க்கப் போனால், மதிப்புரைகள் எல்லாம் நயம் கூறும் பாராட்டுரைகளாகத் தான் காணப்படுகின்றன.

மதிப்புரைகள் விமர்சனங்கள் ஆக மாட்டா.

மதிப்புரை எழுதுகிறவர்கள் விமர்சகர்களாக

அங்கீகரிக்கப்படுவதும் இல்லை.

சில சமயம் மதிப்புரை என்பதே காரமாகவும், தாக்குதலாகவும் இருந்து விடவும் கூடும். மதிப்புரை எழுதுகிறவரின் மனோபாவம் இதற்குக் காரணமாகலாம்.

புதுமைப்பித்தன் சொல்வது இது மதிப்புரை பொதுவாக இலக்கிய விசாரமான ஆராய்ச்சி அல்ல. ஒரு புதுப் புத்தகம் வந்திருக்கிறது, இது இன்னமாதிரி எழுதப்பட்டிருக்கிறது என்பது கண்டிருந்தால் போதும். ஆனால் இன்று வெளிவரும் புத்தகங்கள் எல்லாம், தம்மை ஒரு இலக்கிய மைல்கல் என மார்தட்டிக் கொண்டு வருகின்றன. இப்படிப்பட்டதொரு மயக்க நிலையைப் போக்கச் சற்றுக் காரமான கருத்துக்கள்

வெளியிடப்படுவது குற்றமல்ல."

மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று’ என்று புதுமைப் பித்தன் ஒரு தன்மையைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது

இ வாசகர்களும் விமர்சகர்களும் 134