பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தலைகீழ் விகிதங்கள்", டானியல் எழுதிய பஞ்சமர்கள்' முதலிய நல்ல நாவல்கள் பரவலாக அறியப்படுவதற்கு பாக்கியமுத்து உதவியது நினைவுகூரத் தக்கதாகும்.

"நண்பர் வட்டம் கருத்தரங்கு போன்ற இலக்கியக் கருத்தரங்குகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ் நாவல்கள் மட்டுமல்லாது, சிறுகதைகளும். கவிதைகளும் - தனித்த ஒரு கோணப் பார்வையில் மட்டுமின்றி, முழுமையாக - ஆய்வு செய்யப் பட்டு, விமர்சனக் கட்டுரைகள் படிக்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட வாய்ப்புகளும் வசதிகளும் சித்திக்கு மானால், தமிழ் நாட்டின் வாசகர்களிடையே புதிய விழிப்பும் இலக்கிய உணர்வும் பரவுவதற்கு வழி பிறக்கக் கூடும்.

இவ்வகையில், வேடந்தாங்கல் - விநாயக நல்லூர் இனியவன், ‘இலக்கிய வீதி' என்ற அமைப்பு மூலம், பாராட்டப்பட வேண்டிய தன்மையில், இலக்கியப்

பணி புரிந்து வருவதைக் குறிப்பிடாமல் தீராது.

பல வருடங்களாகச் செயலாற்றி வருகிற இலக்கிய வீதி மாதம் தோறும் விமர்சனக் கூட்டம் நடத்துகிறது. புதிய புத்தகங்களும், எழுத்தாளர் படைப்புகளும், தக்கவர்களால், அங்கு விமர்சிக்கப்படுகின்றன. சில சமயங்களில், உரிய படைப்பாளியும் அழைக்கப்பட்டு, படிக்கப்பட்ட விமர்சனக் கருத்துக்களுக்கு அவர் பதில் அளிக்கவும் வகை செய்யப்படுகிறது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 163