பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதைகளை எழுதித் தனிச் சிறப்பு பெற்றுள்ள வ. வே. சு. அய்யரே, தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியாகவும் மதிக்கப்படுகிறார்.

அவருக்குப் பிறகு, அவர் காட்டிய வழியில், இலக்கிய விமர்சனம் வேகமாகவோ வளமாகவோ

வளர்ந்து விடவில்லை.

1930 களிலும் 1940 களிலும் மறுமலர்ச்சி இலக்கியம் உணம் பெற்றுச் செழுமை அடைந்தது. சிறுகதை புதுமையாகவும், சோதனை ரீதியிலும், ஆழமாகவும் அகண்டதாகவும் வளர்ச்சி பெற்றது. ஆர்வமும் ஆற்றலும் உடைய எழுத்தாளர்கள் அத்துறையில் சீரிய சாதனைகள் புரிந்தனர்.

அவர்கள் உலக இலக்கியங்களில் பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்களும் கூட. ஆயினும் அவர்கள் விமர்சனத்தில் அக்கறை காட்டவில்லை.

விமர்சனம் எழுதுவதற்குப் போதுமான அளவு படைப்பு இலக்கியம் தமிழில் தோன்றவில்லை என்று அவர்கள் கருதினார்கள். அவர்களில் பலரும் எழுதி வந்த இலக்கியப் பத்திரிகைகளும் விமர்சனத்தில் நாட்டம் கொண்டதில்லை.

மறுமலர்ச்சி இலக்கியப் பத் தி ரி கையான ‘மணிக்கொடி யில் அக்காலத்திய எழுத்தாளர்கள் தீவிர சர்ச்சையில் ஈடுபட்டது உண்டு. புத்தக மதிப்புரைப் பகுதியில் ஒன்றிருவர் காரமான οιώuάστυ"αινα வெளியிட்டிருக்கிறார்கள்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 138