பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ரசிகமணி டிகேசி


 இப்படிப் பழகிப்போய்விட்டால் சிலப்பதிகாரம், பெரியபுராணம், கந்தபுராணம் எல்லாம் ஒன்றாய்த்தான் தோன்றும். சங்கநூல்கள் அபாரமாய்த் தோன்றிவிடும்.

இதை எல்லாம் உத்தேசித்துத்தான் மாதவய்யா வருந்தினார். ஏன் இருந்து இருந்து கம்பன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தான் என்பதாக.

தலைவர் எப்படியோ பேசிவிட்டுப் போகிறார் போகட்டும். ஆனால் தாங்கள் ஆணித்தரமாய்ப் பேசினீர்கள். ரொம்ப வாய்ப்பாய் பேசியிருக்கிறீர்கள். நம்மவர்கள் எல்லாருக்கும் ரொம்ப திருப்தியாய் இருந்திருக்கும்.

ராஜாஜி இரண்டு நாளைக்குமுன் இங்கு வந்தார்கள். 20 ஆம் தேதி வாக்கில் அவர்களோடு சென்னைக்குப் போகலாம் என்று எண்ணுகிறேன். ஜனவரி 3 ஆம் தேதி வரை சென்னையில்தான் இருக்க வேண்டிய வரும்.

ராஜேஸ்வரிக்கு உடம்பு சரியாய் இல்லை. அம்மை போட்டிருந்தது என்று எழுதியிருந்தீர்கள். அவள் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாள். பலஹீனம் கொஞ்சநாள் இருக்கும். அதனால் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குளிக்க வைக்கவேண்டும். முற்றிலும் குணமான பிறகுதான் கல்லூரிக்குப் போக வேண்டும். அவளுக்கு என் அன்பைச் சொல்ல வேண்டும்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - 17.12.44 அன்று மதுரையில் கல்ச்சரல் ஆண்டுவிழா நடக்கிறது. அதில் நான் வந்து பேச வேண்டும் என்று ஏ.எஸ்.பி. ஐயர் அவர்கள் கேட்டிருந்தார்கள். உடம்பு செளகரியமாய் இல்லை என்று எழுதிவிட்டேன். செகளரியமாயிந்தால் போயிருக்கலாம். ஏதோ தமிழைப் பற்றி பேசியிருக்க வாய்ப்புக் கிடைத்திருக்குமே.