பக்கம்:நல்ல எறும்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாமல் பக்கத்துச் சிறுவன் காதைப் பிடித்துக் கிள்ளினான் ; அச்சிறுவனுடைய தலையின்மேல் ஒரு சிறு காகிதத்தைக் கிழித்து வைத்தான்; பிறகு முகத்தைப் புத்தகத்தால் மூடிக்கொண்டு சிரித்தான்; குரங்கு போல் கூத்தாடினான். அப்போது ஆசிரியர் அவனைப் பார்த்தார். அவன் பூனைபோல் பேசாமல் இருந்தான். அவன் சட்டைப் பையில் ஒளிந்திருந்த எறும்பு அப்போதும் அவனை ஒன்றும் செய்யவில்லை.



5

சிறிது நேரம் கழிந்தது; ஆசிரியர் ரும்க பலகையில் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார். அப்போது கோதண்டன், அவர் எழுதுவதைக் கவனிக்கவே இல்லை. தன்னிடம் இருந்த வேர்க்கடலையில் சிறிது எடுத்துத் தின்பதற்காக அவன் மெதுவாகத் தன் சட்டைப் பையில் கையை விட்டான். உடனே அந்த எறும்பு மிக்க கோபத்துடன் அவன் கையை நன்றாகக் கடித்து

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/13&oldid=1525815" இலிருந்து மீள்விக்கப்பட்டது