பக்கம்:நல்ல எறும்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தினந்தோறும் குளிப்பதும் இல்லை. அவன் ஆடைகளும் அழுக்காகவே இருக்கும். ஆதலால், அந்த எறும்புக்குக் கோவிந்தன் மீது கோபம் அதிகம். அவன் ஒரு நாள் இரவு சிறிது கற்கண்டு தின்றான். பிறகு அவன் வாய் கழுவாமலே படுத்துக்கொண்டான்.

எல்லாரும் தூங்கும்போது அந்த எறும்பு மெதுவாகக் கோவிந்தன் அருகே சென்றது. பிறகு அது அவன் வாயை ‘வெடுக்’கென்று கடித்தது. அப்போது கோவிந்தன் ‘ஓ’ என்று கூவி அழுதான். அந்த எறும்பு உடனே எங்கேயோ ஓடிப் போய்விட்டது.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/6&oldid=1525811" இலிருந்து மீள்விக்கப்பட்டது