பக்கம்:நல்ல எறும்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகவும் வேண்டி வேண்டி அழைத்தாள். அவன் தகப்பனார் அவனுக்குப் பலவித சமாதான வார்த்தைகள் சொன்னார். பிறகு கோபித்தார்; முடிவில் நன்றாக அடித்தார். அவன் அப்போதும் சாப்பிடவேயில்லை.

அவள், பள்ளியில் கூட இவ்விதம் பிடிவாதம் செய்வான். அதனால் அவன் அடிக்கடி ஆசிரியரிடம் அடிபடுவான் ; அல்லது பலகையின் மேல் நீன்று கொண்டு வருந்துவான்.

நாராயணன் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தான். அப்போது அவன் காலில் ஒரு கண்ணாடித் துண்டு பொத்துக் கொண்டது. அதனால் அவன் சில நாட்கள் வருந்தினான். ஆதலால் அவன் தன் குதிகாலைத் தூக்கியே நடந்தான்.

சில நாளில் நாராயணனுக்கு அந்த நோய் நீங்கிவிட்டது. ஆனால் அவன் அப்போதும் தன் குதிகாலைத் தூக்கியபடியே நடந்தான்.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/34&oldid=1525807" இலிருந்து மீள்விக்கப்பட்டது