பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எட்டிப் பறிக்க இயலாக் கனிகள்
    எளிதில் பொறுக்கி எடுத்தாள்;-அவள்
ஒட்டிக் கிடந்த மணலை வாயால்
    ஊதி ஊதித் துடைத்தாள். 10

‘கனிதான் சுடுகின் றனவோ?’ என்றே
    கைகள் கொட்டிக் களித்தான் ;-அவன்
‘இனியும் பொருள்தான் அறிந்தாய் இலையோ’
    என்று சொல்லி நகைத்தான். 11

‘சுடுதல் இல்லாக் கனியே செங்காய்
    சுடுதல் பழங்கள்’ என்றே-வன
நடுவே வாழும் சிறுவன் சொல்ல
    நானும் அறிந்தேன் இன்றே. 12

'மனமே மிகவும் கற்றோம் என்றே
    மகிழ வேண்டாம் வீணே', -எனக்
கனிவாய் அவ்வை கடிதே கவியும்
    கட்டிக் கூறினாளே. 13


அவ்வை கூறிய கவி

கற்ற துகைம் மண்ணளவு கல்லாத(து) உலகளவென்(று)
உற்ற கலைமடங்தை ஓதுகின் றாள்-மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டா புலவீர்!
எறும்புந்தன் கையால்எண் சாண்.

53