பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

வல்லதாக உருமாற்றினார். அதன் விளைவாக இன்று தமிழ் உட்பட 85 உலக மொழிகளில் அறிவியல் நுட்பக் கருத்துக் களை வெளியிடும் யுனெஸ்கோ கூரியர் சர்வதேச திங்களிதழ் ஹீப்ரு மொழியிலும் கிரீக் மொழியிலும் இன்று வெற்கரமாக வெளிவர முடிகிறது.

இறைப்பை நோக்கிச் சென்ற கிரிக் மொழி இன்று ஆற்றல் மிக்க அறிவியல் மொழியாகக் குறுகிய கயலத்தில் வடிவெடுக்க மேற்கொண்ட வழி முறைகள், நமக்குப் பல உண்மைகளை உணர்த்தி வழிகாட்டுவதாக உள்ளன.

கிரேக்க நாடு பன்னெடுங்காலம் துருக்கி போன்ற நாடுகட் கும் மொழிகட்கும் அடிமைப்பட்டுக் கிடந்த காரணத்தால் சாக் ரட்டிசும் பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் பயன்படுத்திய கிரீக் மொழி. நாளடைவில் பயன்பாடற்ற மொழியாக ஆக நேர்ந்தது. ஆட்சி அடிமை கொண்ட மொழிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டு வளர்ச்சி குன்றிய நிலையை எய்தியது. நாளடைவில் பல்வேறு மொழிகளின் கூட்டுக் கலவையாக உருத்தெறியாவண்ணம் சிதைவடையலாயிற்று.

ஆயினும், கிரேக்க நாடு விடுதலை பெற்ற பின்னர், நாட்டு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் புத்துயிரூட்ட முனைந்தது போலவே, பெருங்காயக் கலயமாக இருந்த கிரீக் மொழியை உயிருட்டி வலுவாக இயங்க வைக்க முனைந்தனர் தங்தள் தாய் மொழியின் பழம் பெருமைகளையும் அறிவாற்றல், சிந்த்னைத் திறத்தையும் இலக்கிய வழி எடுத்துக் கூறி, மக்களிடையே புத் தெழுச்சி ஏற்படச் செய்தனர். மக்கள் தங்கள் தாய்மொழி மீது தணியாத பற்றுக் கொண்டனர். தங்கள் அன்றாட வாழ்வில் தாய் மொழிக்கே தனிப்பெரும் முக்கியத்துவம் தந்தனர், பிற மொழிச் சொற்களை விலக்க முற்பட்டனர். தூய மொழி உணர்வு காட்டாற்று வெள்ளமென எங்கும் தலைதுாக்கியது.

இந்நிலை கண்ட நாட்டுத் தலைவர்கள் காலத்திகேற்ற மொழிக் கொள்கையை வகுத்துக் கடைப்பிடிக்க முற்பட்டனர். கிரேக்கத்திற்கு எல்லாவகையிலும் பெருமை தேடித்தந்த சாக்ரட் டீசும் பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கையாண்ட பழைய தூய கிரீக் மொழியையே மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென ஒரு சாரார் கோரினர். மற்றொரு சாரார், கலப்பட மொழியாக மக்களிடையே வழங்கிவரும் மொழியையே கடைப்பிடிக்க வேண் டும்; அப்போதுதான் இக் கால அறுவியல் துட்பக் கருத்துக்கனை