பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

89

இந்தியா ஒரு வேளாண் நாடு. இங்கு மண்ணை நம்பி வாழும் உழவர் பெருமக்களே நாட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதி. அவர்கள் வாழ்வு சிறக்க நீர்வளம் இன்றியமையாதது. ஆனால், நாடெங்கும் அவ்வளம் ஒரே சீராக இல்லை. சில பகுதி நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மழைக்கு ஏங்குகின்றன. சில பகுதி உள் சீரான நீர்வளத்தால் வளம் கொழிக்கும் நிலையைப் பெற்றுள்ளன. மற்றொரு பகுதி அடிக்கடி மிகைத்துவரும் நீர்ப் பெருக்கால் இடர்ப்பாடடையும் நிலை. சில பகுதி ஆறுகளில் பொங்கி வரும் பெரும் நீர்ப் பெருக்கு யாருக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நிலை. இத்தகைய முரண்பாடான நீரியல் போக்கினை மாற்றியமைக்க அறிவியல் அடிப்படையில் தீர்வு காண முற்படும் பாரதியார், இமயமலையிலிருந்து கங்கை நதியில் அடிக்கடி மிகைத்து ஓடிவரும் நீரை, நீர்த் தேவையால் ஏங்கித் தவிக்கும் மத்தியப் பகுதியிலும் தென்னகத்திலும் ஆற்றுவழி திருப்பி, சமநிலை காணத் துடிக்கிறார்.

'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'

என முழக்கம் செய்கிறார்,

ஆற்று வளத்தையும் நீர்ச்சிறப்பையும் வேண்டுமளவுக்குப் பாடிய புலவர்களும் கவிஞர்களும் பலருண்டு. ஆனால், நாட்டின் பொருளாதார சமச்சீருக்கு உதவும் வகையில் ஓடி வீணாகும் ஒரு பக்கத்து நீரை, தேவையின் அடிப்படையில் மற்றொரு பக்கத்துக்குக் கொண்டு சென்று வளமூட்ட வழிகாட்டிய விஞ் ஞானக் கவிஞர் பாரதி மட்டுமே.

கங்கை காவிரி இணைப்புத் திட்டமாக இன்று பேசப்படும் இத்திட்டத்தை விஸ்வேஸ்வரய்யாவே சிந்திக்காத காலத்தில் தூரநோக்கோடு அறிவியல் பார்வை கொண்டு, நாட்டின் பொருளாதார சமத்துவத்தை அணுகிய கவிஞர் என்ற சிறப்புக் குப் பாத்திரமாகிறார் பாரதி.

அறிவியல் மறுமலர்ச்சி

ஆங்கிலேயர்கள் இந்நாடு வந்த பின்னர் அவர்கள் மூலம் வந்து சேர்ந்த இக்கால அறிவியல் புதுப் புனைவுகள், இங்குள்ள சிந்தனையாளர்கள் மத்தியில் மறுமலர்ச்சி உணர்வுகளைத் தூண்டிவிட ஏதுவாயின. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் அசுர வேகத்தில் விஞ்ஞான மாற்றங்கள் சங்கிலித்தொடர் போல் வாழ்வியல் துறைகள் அனைத்திலும் நிகழ்ந்து