பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

88

நிலையை எட்டியிருக்கிறோம். வருகிற 21-வது நூற்றாண்டின் நடுப் பகுதிகள், அல்லது முடிவிற்குள் மனிதன் சாகாவரம் பெறா விட்டாலும். அவனது ஆயுள் கணிசமான அளவிற்கு நீடிக்கப் படும் என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கிநது மனிதனுக்கு வயது நூறல்லதில்லை’ என்ற அவ்வைப் பெருமாட்டியின் கணிப்பு இன்றுவரை பொதுவான உண்மை. அது நாளை மாறுவது உறுதி எனவே. "அனுகு முறை ஆக்கவும் அழிக்கவும் வல்லது. பண்டைப் பாரம்பரிய வளமும், அதில் பெருமையும் கொண்ட பல சமுதாயங்கள், தங்களது பார்வைகளினாலேயே, செயல்

இழந்தன, தேங்கி நின்றன.

'காலத்திற்கேற்ற வளர்ச்சி, வளர்ச்சிக்கு உதவும் மாற்றங் கள், மாற்றங்களை வரவேற்கும் மனப்பான்மை, அது மலர்வதற் கேற்ற பார்வை, அந்தப் பார்வையின் அடிப்படையிலமைந்த அணுகுமுறை ஒரு சமுதாயத்தின் முக்கியமான தேவையாகும்." என்ற கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகும்.

இத்தகைய அறிவியல் பார்வையுடனும் அணுகுமுறையுட னும் காலத்தை வெல்லத்தக்க வகையில் கருத்துக்கூறிய தற் காலக் கவிஞர்களில் பாரதியே உயர்ந்து நிற்கின்றார்.

மண்ணில் விண்ணைக் காணுதல்

முதற்கண் விண்ணை நோக்கி வாழும் போக்கை மாற்றி மண்ணை நோக்கி வாழத் தூண்டுகிறார். விண்ணுலகால் பெற விரும்பும் அமர வாழ்வை மண்ணுலகிலே பெற வழிகாட்டுகிறார். அவரது வழியில் அமர நிலை என்பது இந்திய மண்ணிற் பிறந்த மக்கட்கெல்லாம் கிடைப்பதாகும்.

எல்லோரும் அமரநிலை எய்தும் நல்வழியை இந்தியா உலகத்திற் களிக்கும்-நம் இந்தியா உலகிற் களிக்கும்.’’ எனக் கூறும் பாரதியின் உட்கிடக்கையை நன்குணர்ந்த கவிஞர் குலோத்துங்கன்,

'அண்ணாந்து விண்ணுலகைப் பார்த்துப் பார்த்து அது சேரும் வழிதேடி அலைந்த நாட்டில் மண்ணே நம் சொர்க்கமெனும் மாற்றம் சொன்னான் மானிடர்கள் தேவர்களாய் வளர்க என்றான்'

எனப் பாரதியின் உட்கிடக்கையை வெளிபடுத்துகிறார்.