பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

$5

"எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச்சொல்லி தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோமில்லை தகத்தாயத் தமிழை தாபிப்போம் வாரீர்”

எனப் பயனுள்ள முறையில் பணியாற்ற அழைப்பு விடுத்தார்.

அனைத்துத் துறைகளிலும் அழுத்தமாகக் காலூன்றி வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மேற்குலக மொழிகளெல்லாம் மின்னல் வேகத்தில் விரைந்து வளர்ச்சி பெற்று வருவதைக் கண்ணுறும் மற்றொரு எழுச்சிக் கவிஞர் குலோத்துங்கன் தமிழுக்குப் பின்னால் பிறந்த இளைய மொழி களெல்லாம் அறிவியல் மொழிகளாக வலுவோடு வளரும்போது, மொழிகளுக்கெல்லாம் மூத்த இனிய தமிழ் மொழி இப்போட்டி யில் ஈடுகொடுக்க இயலாது, எங்கே இளைத்துவிடுமோ என எண்ணி மறகுகிறார்.

"அறிவியல் உலகம் விரிகிறது -நிதம்

அது செல்லும் வேகம் மிகுகிறது; பொறியியல் கருவிகள் சமைகின்றன-நிதம் புதுமைகள், புதுமைகள் புலர்கின்றன. அந்திய மொழிக்குலம் முன் நடக்கும் -புது அறிவின் துறைகளை வழி நடத்தும். என்னுடை மொழி அவண் இல்லையடா-அது எங்கோ தேங்கி ஏங்குதடா, நாளும் நம்மொழி பிந்துதடா புவி நம்மைப் பிரிந்து முந்துதடா ஆளுமை தருவது கல்வியடா-நமக் கன்னை மொழித்துணை இல்லையடா..."

என கால வேகத்திற்கேற்ற நம் மொழியின் செயலின்மை கண்டு, உலக வளர்ச்சிப் போக்கினின்றும் உதறித் தள்ளப்பட்டுவிடு வோமோ என அஞ்சும் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்து முகத்தான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய விழையும் பாரதியார், அறி வியலின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இயலா நிலையில், தமிழ் மொழி பின் தங்கி, எங்கே தாழ்ந்து விடுமோ என அஞ்சித் துடித்தார்.

'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே -அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.