பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185

தமிழ் எழுத்தொலியின் தனிச் சிறப்பு

தமிழில் ஒரு சொல்லில் அமையும் எழுத்துகளில் முன்னும் பின்னும் இடம்பெறும் எழுத்துகளுக்கேற்ப நடுவெழுத்தின் ஒலி மாறுபடும் என்பது மொழியியலார் கருத்து. இதைத் தமிழ் மொழி தனக்குரிய தனித்தன்மையாகப் பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சான்றாக, காடு, என்ற சொல்லில் முதலில் வரும் க எழுத்தின் ஒலிக்கும். பக்கம்' என்ற சொல்லில் வரும் 'க' எழுத்தொலிக்கும் பகல்’ எனும் சொல்லில் பயன்பட்டுள்ள க' எழுத்தின் ஒலிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஒரே எழுத்து அது வகிக்கும் இடத்தைப் பொருத்தும், எந்தெந்த எழுத்துகளை அடுத்து, அவ்லது இடையே வருகிறதோ அதைப் பொருத்தும் தன் ஒலிப்பைத் தானாகவே மாற்றிக்கொள்கிறது என்பது தமிழின் தனிச்சிறப்பு என்பதில் ஐயமில்லை.

எனினும். இத்தகைய தமிழ் எழுத்தொலித் தனித்தன்மைகள் அறிவியல் தமிழில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களின் ஒலி பெயர்ப்பிற்குப் பெருமளவில் உதவுவதாக இல்லை.

அறிவியல் ஒலிபெயப்பும் தனித்துவ தமிழ் எழுத்தொலிகளும்

அறிவியல் கலைச் சொற்களின் ஒலி பெயர்ப்புகள் துல்லிய மாகவும் அதே சமயம் மறையொலிகளாக இல்லாது வெளிப் படையான ஒலிகளாக அமைதல் மிக அவசியமாகும். இவ்வொலி களைப் பெற தவிர்க்க முடியாத நிலையில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது உசிதமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

உலகளாவிய கிரந்த எழுத்தொலிகள் §

கிரந்த எழுத்தொலிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் உலக மொழிகள் அனைத்திலுமே இடம் பெற்றிருக்கின்றன. எனவே, எந்த மொழி சார்ந்த சொல்லாயிருந்தாலும் அதனைத் துல்லிய மாகத் தமிழில் ஒலிபெயர்க்கக் கிரந்த எழுத்துகளைப் பயன் படுத்துவது அவசியமாகும்.

ஒரு கசப்பான உண்மை

தனித் தமிழ்ார்வமிக்க சிலர். தங்கள் தமிழார்வத்தை வெளிப் படுத்தும் வகையில் கிரந்த எழுத்துகளோடு கூடிய சமஸ்கிருத தமிழ்ச் சொற்களை தூய தமிழ் ஒலிக்கு மாற்றமடையச் செய்வ தில் காட்டுகின்ற ஆர்வத்தில் ஒரு பகுதியைத் தூய தமிழ்ச் சொற்