பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







32. என் விருப்பம்


காலயில் எழுவேன்; கடவுளைத் தொழுவேன்;
கருத்துடன் படிப்பேனே ;
வேலைகள் என்றன் பெற்றோர் இடுமுன்
விருப்புடன் புரிவேனே. 1

கூழே எனினும் குறைகூ றாமல்
களிப்புடன் உண்பேனே;
ஏழை எளியோர் ஏக்கம் கண்டால்
இன்புடன் தீர்ப்பேனே. 2

பொன்னே தரினும் பொய்பே சாமல்
புகழே பெறுவேனே;
என்னால் ஆகா தென்றே எதற்கும்
ஏங்கித் தளரேனே. 3

கல்விச் சாலை சென்றே கற்கக்
காலந் தவறேனே;
சொல்லும் பாடம் யாவும் கேட்டே
சொகுசாய்க் கற்பேனே. 4

வயதில் பெரியோர் வருதல் கண்டால்
வணக்கம் புரிவேனே;
நயமே பேசி நன்மை நாடி
நலமாய் வாழ்வேனே. 5

37