பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69

மட்டும் சுவையுடன் சுட்டும் பாடல்களாக இயற்றப் பட்டிருந்தது என்பதே அது. சங்கப பாடல்களில் இயல்புக்கு மாறான க பனைகளையோ செய்திகளையோ காண்பது அரிது.

ஆனால், சமய இலக்கியங்கள் எழத் தொடங்கிய பின்னர் இந்நிலையும் மாறத் தொடங்கியது இதற்கு முதன் முறையாக வழி வகுத்த பெருமை இரட்டைக் காப்பியங்களான சிலப்பதி காரம், மணிமேகலை படைப்புகளையே சாரும். இதனை அடுத்து எழுந்த பக்தி இயக்க கால இலக்கி பங்களில் இயல்பிறந்த கற் பனைகள் (Supernatural) மிக அதிக அளவில் இடம் பெறலாயின.

வாழ்க்கைப் பின்னணி சமயப் பின்னணியாக மாற்றமுற் றது

சங்கப் புலவர்களால் வாழ்க்கையில் காணும் இன்ப துன்ப உணர்வு வெளிப்பாடுகளைப் புலப்படுத்த இயற்கை நிகழ்ச்சி களை சுவைமிகு கறயனைக் காட்சிகளாகத் தம் பாடல்களில் அமைத்தனர் அதே காட்சிக்களம் பக்தி இயக்க காலத்தில் சமயப்பின்னணியாகப் இறைவனுறையும் ஆலயச் சூழலாகச் சமயப் புலவர்களால் சுட்டப்பட்டன

சான்றாக, காதலி ஒரு நாள் தன் காதலனை இனிமைமிக்க இயற்கைச் சூழலில் காண்கிறாள் மலையில் வளர்ந்தோங்கிய மூங்கில் துளையின் வழியே புகந்துவரும் காற்று இனிய குழ லோசையை எழுப்புகிறது மலை திேருந்து கொட்டும் அருவி இனிய முழவாக அமைந்து இசை எழுப்புகிறது. இன்பமாகத் துள்ளி விளையாடும்போது எழும் மானின் குரல் தூம்பு’ எனும் இசையாகக் கேட்கிறது. வண்டுகள் எழுப்பும் இனிய ரீங்கார ஓசை காதுக்குக் குளிமையூட்டும் யாழ் இசையொலியாக எழு கிறது. இவற்றையெல்லாம் கண்டுகளிக்க குரங்குகள் குழுமியிருக் கின்றன. அச் சமயத்தே அங்கிருந்தி கோல மயிலொன்று தன் வண்ணத் தோகையை விரித்தாடியது," என இயல்பான இயற் கைக் காட்சிகளை காதலின் இன்பமா சூழ்நிலைக்கு ஏற்ற பின்னணிக் காட்சியாகக் காட்டினர் சங்கப் புலவர்.

வாழ்வியல் பின்னணியாகச் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற இதே இயற்கைக்காட்சி பக்தி இயக்க காலத்திலே எழுந்த பக்திப் பனுவல்களில் இறைவன் உறையும் கோயில்களின் பின் னணிக் காட்சிகளாக உருமாறின என்பதைத் தேவாரப்பாடலில் காண்கிறோம். ஆழ்வார் பாசுரங்களும் இதே போக்கில் காட்சி களை அமைத்துக்காட்டத் தவறவில்லை.