பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

186

அறிவியல் நூல்களைப் படைக்க முயலும் அதே சமயத்தில் விரைந்து வளர்ந்து வளம் பெற்றுவரும் மேற்குலக அறிவியல் அறிவை உடனுக்குடன் தமிழில் பெற மொழிபெயர்ப்பும் இன்றி யமையாத தேவையாக உள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எத்தகைய மொழிபெயர்ப்பு முறைகளைக் கடைப்பிடித்து அறிவியல் நுட்பச் செய்திகளை மொழிபெயர்க்கலாம் என்பதை அறிய முயல்வது பயன்தரும் ஒன்றாக இருக்கும்.

உள்ளது உள்ளவாறே

அறிவியலைப் பொருத்தவரை உள்ளதை உள்ளவாறே எவ் வித மாற்றமும் திருத்தமும் இன்றி நீக்கலும் சேர்ப்புமின்றி மொழி பெயர்க்க வேண்டியது தலையாய பண்பாகும்.

அறிவியலை மொழிபெயர்க்க முனைவோருக்கு முதலில் இருக்க வேண்டிய தலையாய அம்சம் எந்தத் துறை அறிவியல் செய்தியை மொழி பெயர்க்க முனைகிறாரோ, அந்தத் துறையில் போதிய பொருளறிவு இருக்க வேண்டியது மிகமிக அவசியமா கும். அதற்கு அடுத்து ஆங்கில மொழியில் போதிய அளவு புலமையும் பயிற்சியும் உள்ளவராக இருத்தல் வேண்டும் மூன் றாவதாகத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய போதிய தமிழ்ப் புலமையும் பயிற்சியும் ஏற்ற சொல்லாட்சித் திறனும் எழுத்தாற் றலும் ஒருங்கே அமையப் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தகுதியைப் பெற்றவரே அறிவியல் நுட்பக் கருத்துக்களை வழுவி லாது மொழி பெயர்க்க முடியும் என்பது அனுபவ உண்மை

பல பொருளின்றி ஒரு பொருள்

அறிவியல் மொழிபெயர்ப்பில் கவனிக்கப்பட வேண்டிய முக் கிய அம்சம உரிய முறையில் சொல்லைக் கையாள்வதாகும். சுவையற்ற அறிவியல் செய் களைச் சுவையாகச் சொல்லக் கருதி பல பொருள் தரும் இலக்கிய நயமான சொற்களைப் பயன்படுத்தினால் அறிவியல் மூல நூலாசிரியனின் கருத்திலே சிதைவும பொருளிலே மாற்றமும் ஏற்பட்டுவிட வாய்ப்பும் தவ றான பொருள் விளக்கம் தர வழியும் உண்டாகும். பொருள் மயக்கத்திற்குக் கடுகளவும் இடம் தராது, உள்ளது உள்ளபடியே பெயர்த்தல் வேண்டும். மொழிபெயர்ப்பாளன் மூலம், நூலா சிரியன் திறம்படப் பேசுமாறு மொழிபெயர்ப்பு அமைய வேண்டு வது அவசியமாகும்.