பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

218

மயம் உயிர்நெடிசல்களாக ஆ, ஈ, ஊ, ஏ, ஒ ஆகிய ஐந்துஎழுத் துகள் உயிர்க் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவையும் உயிர்க் குறில்களின் இன எழுத்துகளாகவே அமைந்து உள்ளன. இவ்வுயிர் நெடில்களை அா, இா, உா, எா, ஒா எனக் காலிட்டு எழுதுவதின் மூலம் எளிதாகப் பெற முடியும் என்ற கருத்தும் இருந்து வருகிறது. இவ்வகையில் மேலும் ஐந்து குறியீடுகள் குறைய வாய்ப்புண்டு.

247 ஒலி வடிவங்களைப் பதிவு செய்யும் 34 குறியீடுகள்

இவ்வாறெல்லாம் தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் சீரமைப்ப தால் தமிழ் எழுத்துக் குறியீடுகள் 181லிருந்து 184 ஆகக் குறை கிறது. அதே சமயம் எவ்வித மாற்றமும் திருத்தமும் சேர்ப்பும் நீக்கலும் இல்லாது தமிழின் அடிப்படை ஒலிகளாக அமைந் துள்ள 247 ஒலி வடிவங்களும் அப்படியே இருக்கின்றன. இவ் வொலி வடிவங்களை பதிவு செய்ய தேவைக்கு அதிகமாகப் பயன்பட்டு வந்த குறியீடுகளே குறைக்கப்பட்டுள்ளன. இத னால், மொழிக்கு எத்தகைய ஊறும் நேர்ந்துவிடப் போவ தில்லை.

மேலும். சில எழுத்துச் சீர்மைகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு மொழி எழுத்துகளும் இடமாகவோ, அல்லது வலமாகவோ எழுதப்படுகின்றன. ஆனால் எந்த மொழி எழுத் தும் ஒரே சமயத்தில் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் மாற்றி மாற்றி எழுதப்படுவதில்லை. ஆனால். தமிழை இந்த வகையி லேதான் எழுதி வருகிறோம். கொ' என்பதை எடுத்துக் கொண் டால் 'க' வுக்கு இடப்புறம் கொம்பும் வலப்புறம் காலெழுத்தை யும் அமைக்கிறோம். இதைச் சீர்மைப்படுத்தி கரெ என எழுது வதைப் பற்றிச் சிந்திப்பதில் தவறில்லை என எண்ணுகிறேன். இச் சீர்மையைச் செய்வதன் மூலம் ஒரே போக்காக எழுத்து களைத் தொடர்ந்து அமைத்துச் செல்வது எளிதாக இருக்கும்.

எழுத்துச் சீர்மை காணும் உலகத் தமிழ் வல்லுநர் குழு

காலத்தின் போக்குக்கேற்ப தமிழைச் சீர்மைப்படுத்த விழை யும் போது நாம் மனதிற் கொள்ளவேண்டிய சில சிந்தனைகளே இங்கு மேற்போக்காகச் சுட்டிக் காட்டப்பட்டன. இத்தகைய சிந்தனைகள் தமிழ் வளர்ச்சியில் உண்மையான ஆர்வமும் அக்கறையும் உள்ள அறிஞர்களின் நெஞ்சங்களில் அண்மைக் காலமாக அசைபோட்டு வருவனவேயாகும். இச் சிந்தனைகளை