பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிபெயர்ப்பு எனும் இணையிலா இணைப்புப் பாலம்

பரந்து விரிந்த உலகம் இன்று குறுகிக் கொண்டு வருகிற தெனலாம். அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட செய்தித் தொடர்புச் சாதனங்கள் நாடுகளுக்கிடையே மிக நெருக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடுகளுக் கிடையே மட்டுமா இந்த இருக்கமான நெருக்கம் ஏற்பட்டு வரு கிறது? உலகெங்கும் வாழும் மக்களுக்கிடையேயும் அழுத்தமான பிணைப்பும் ஆழமான உறவும் ஏற்பட்டு வருகின்றன.

உலக நாடுகளுக்கிடையே வாழும் மக்களிடையே முன்பு எப்போதையும்விட இப்போது மன நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இத்தகைய உள்ளப் பிணைப்பு உறுதிப் பட, உறுதிப்பட, மக்களிடையே ஒருமைப்பாடு’ எனும் உயர் பண்பு அழுத்தமாக நிலை கொள்ளும். இதற்கு அடிப்படையாக மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய புரிந்துணர்வை உருவாக்கும் அருங்கலையாக இன்று அமைந்திருப்பது மொழிபெயர்ப்புக் கலை ஆகும்.

மொழிக்கும் முந்தியது மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்புக் கலையின் வரலாறு மனிதகுல வரலாற் றோடு ஒன்றிணைந்ததாகும். அது மொழிக்கும் முந்திய வரலாறாகும்.

கலைகள் அனைத்துமே மனிதனின் அனுபவத்தினின்றே முகிழ்த் தெழுந்தவைகளாகும். அனுபவத் திரட்சியாக மலரும் கலைகளே அவனது மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழி கோலு கின்றன. மந்த மாருதம் தென்றல் வீசும் மாலை நேரத்தில் வண்ணத் தோகையினை விரித்தாடும் அழகு மயிலின் ஒய்யார ஆட்டத்தைக்கண்டு மகிழ்ந்த மனிதன், தானும் அதைப்போல ஆடவேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றான். ஆடற்கலை பிறந்தது. குயிலின் குரலோசையைக் கேட்டு மகிழ்ந்தபோது, தானும் அதைப்போல குரலெடுத்து இன்னோசை,எழுப்ப முயன் றான். இனிய இசைக்கலை எழுந்தது. அதே போன்று தன் எண்ணத்தில் மலர்ந்த உணர்வையும் கருத்தையும் மற்றவர்க்கு