பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

208

பாக உருவாக்கப்பட்ட புதிய ஒலிகளின் வரி வடிவங்களாகிய கிரந்த எழுத்துகள் இப்பெயரைப் பெற்றது பொருத்தமேயாகும்.

சாசனத் தமிழில் கிரந்தம்

இக் கிரந்த எழுத்துகளைக் கொண்டு வடமொழிச் சாசனங் களையும் தமிழ்ச் சாசனங்களில் இடம்பெறும் வட மொழிச் சொற்களையும் எழுதி வந்தனர்.

ஆரிய எழுத்து

தென்னகம் முழுவதும் பரவியிருந்த இக் கிரந்த எழுத்துகளே பலவித மாற்ற திருத்தங்களோடு ஆரிய எழுத்து' என்ற மகுட மேற்று மலையாள மொழி எழுத்துகளும் துளு மொழி எழுத்து களும் உருவாகக் காரணமாயமைந்தன.

கிரந்தம் வடமொழி எழுத்தல்ல

சமஸ்கிருத எழுத்துகள், தேவர்.வளின் நகரமாகக் கருதப் பட்ட காசி மாநகரில் உருவாக்கப்பட்டதனால் தேவ நாகரி" என்ற பெயரைப் பெற்றது தேவ நாகரி வரி வடிவத்திற்கும் கிரந்த எழுத்துகளின் வரி வடிவத்திற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை. மாறாக கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளின் உருவ மைப்பை அடியொற்றி, அதன் சாயலிலேயே உருவாக்கப்பட்ட வைகளாகும் தமிழ் வரிவடிவ எழுத்துமுறைக் கொப்ப வலமாக எழுதும் வகையில் கிரந்த எழுத்து. ஸ் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கதாகும்.

இதினின்றும் வடமொழி ஒலிப்புகளைத் தமிழில் பெற, வர்க்க எழுத்துகளோடு கூடியதாகத் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட புது வகை வரிவடிவ எழுத்துகளே கிரந்த எழுத்துகள்' என்பது தெளிவாகிறது. இவை வடமொழி எழுத்துகள் எனப் பேசப்பட் டும் எழுதப்பட்டும் வருவது தவறாகும்.

சமயச் செல்வாக்கில் கிரந்த வளர்ச்சி

“கிரத்த எழுத்துகள் சமயச் சூழலுக்குள் அங்கீகரிக்கப்பட் டிருந்ததே தவிர இலக்கியப் புலவர்களாலும் இலக்கணப் புலவர் களாலும் பொது மக்களாலும் ஏற்கப்படாமலே இருந்து வந் துள்ளது. வடமொழித்தாக்கம் குறைந்த சமயச் சூழலும் நாள டைவில் இவ்வெழுத்து முறைகளை நிராகரித்து வந்துள்ளது. இதனால், ஸ், ஷ, ஹ, ஜ, கூடி, நீ ஆகிய ஆறு எழுத்துகளைத்