பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

182

மற்றொருவரான அ. மாதவையா சிறுவர்க்கான பல வெளி காட்டுக் கதைகளைப் பெயர்த்து பத்திரிகையில் படங்களோடு வெளியிட்டுள்ளார் அவைகளில் சில நூல் வடிவம் பெற்றுள்ளன.

சில ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறுவர்க்கான பிறமொழிக் கதைகளைப் பெயர்த்து, வானொலி மூலம் பரப்பிய பெருமை பி. ஆர். ராஜ சூடாமணிக்கு உண்டு. இவர் பல்வேறு மொழிச் சிறுவர் கசைகளைப் பெருமளவில் பெயர்த்து ஒலி பரப்பியுள் ளார். சிறுவர்க்கான கதை இலக்கியப் பெயர்ப்புப் பணியைத் திறம்பட ஆற்றியவர்களுள் குறிப்பிடத்தக்க மற்றொருவர் கவி மணி தேசிக விநாயகம் பிள்ளையாவார். இப்பணியில் முன்னோ டியாக விளங்கிய பாரதியார் போன்றவர்கள் பெயர்ப்பாகவும் தமுவலாகவும் தந்த பல்வேறு மொழிச் சிறுவர் கதைகளை தமிழ் நாட்டி ன் மரபு, பண்பாட்டுப் போக்கிற்கேற்ற வண்ணம் சொற் கவைமிக்க இனிய பாடல்களாக யாத்துத் தந்துள்ளார். குழந் தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, ஈசாப்பின் சிறுவர்க்கான புனை கதைகளை ஈசாப் கதைப்பாடல் களாக இனிமைச்சுவை பொங்கப் பாடல்களாகப் புனைந்து தந்துள்ளார்.

பதிப்பக, நிறுவனங்களின் நிறைவான பணி

இத் துறையில் பல்வேறு பதிப்பகங்களும் நிறுவனங்களும மன நிறைவளிக்கும் வண்ணம் சிறுவர் இலக்கியப் பெயர்ப்புப் பணியை ஆற்றியிருந்த போதிலும், இத்துறையில் மிகச் சிறந்த பெருக்கமான பணியை ஆற்றிய பெருமை தென்மொழிகள் புத்தக நிறுவனத்தையே சாரும். மொழி பெயர்ப்பையே மூல நோக்க மாகக் கொண்ட இந்நிறுவனம் பல்வேறு மொழிகளில் வெளிவந்த

சிறுவர் இலக்கியங்களைத் தமிழில் தந்துள்ளது.

சிறுவர் இலக்கிய நூல்கள் மட்டுமல்லாது ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வெளிவந்த சிறுவர்க்கான அறிவியல் படைப்பு களையும் பெயர்த்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள சிறுவர் இலக்கிய மொழி பெயர்ப்பு நூல்களில் பெரும்பாலானவை மொழியாக்கமாகவும் தழுவலாகவுமே அமைந்துள்ளன. இதற்குக் காரணம். நம் சிறுவர் களின் ரசனைத் திறனுக்கும் புரிந்துணர்வுக்கும் ஏற்ப அவற்றைப் பெயர்க்க வேண்டியதாகியது. ஆனால், இத்தகைய பெயர்ப்பு முறைகள் கதை இலக்கியங்களுக்கும் கவிதைப் படைப்பு களுக்கும் ஏற்புடையதாக அமையலாமே தவிர, அறிவியல் போன்ற புதுமைத் துறைகளுக்கு அவ்வளவாகப் பொருந்தாது.