பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

212

யீட்டை அடிப் பகுதியில் கீழே அமைத்து ‘கு’ எனும் குறியீட்டை உருவாக்க வேண்டும். எனவே, தமிழ் எழுத்துக் குறியீடுகளை மூன்று அடுக்குகளாக உருவாக்கிப் பயன்படுத்த வேண்டியுள் ளது. இதன் மூலம் ஒரு எழுத்தின் மேலும் கீழும் குறியீடுகளை அமைக்க அதில் நேரமும், சக்தியும் செலவிட்டே தீரவேண்டிய தாக ஆகிறது.

இப்பிரச்சினையைத் தீர்க்க இ’ கரம், 'ஈ' காரம், 'உ'கரம். "ஊ" காரம் ஆகியவற்றிற்குப் பொதுவான குறியீடுகளை உரு வாக்கிக் கொண்டால் மேலும் கீழுமாகப் பெருமளவில் குறியீடு களை அமைக்கும் சிரமம் வெகுவாகக் குறைந்துவிடுமே என எழுத்துச் சர்மையில் அக்கறையுள்ளோர் கருதுகின்றனர்.

இதே பிரச்சினையை அண்டை மாநிலமான கேரளத்தில் எந்தவிதமான எதிர்ப்போ, ஆராவாரமோ சர்ச்சையோ இல் லாது அரசே ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, அதன் முடிவைப்

பெற்று மிக எளிதாகத் தீர்த்து வழிகாட்டியுள்ளது இதற்காக நாமும் புதிய குறியீடுகளை உருவாக்க வேண்டிய அவசியமே

இல்லை. தமிழோடு இணைந்து நீண்ட காலமாக புழங்கி வரும் ஜி, ஜி, ஜு ஜூ ஆகிய எழுத்துக்களின் மேல் குறியீடுகளான ". 9 ஆகியவற்றை ஏற்பதன் மூலம் 72 குறியீடுகள் (எழுத்துகள் அல்ல) குறைகின்றன.

இக் குறியீடுகளைப் படுக்கை வசமாகப் பயன்படுத்தும் போது அதிக இடத்தை எடுத்துக் கொள் து இயல்பே, அதைக் குறைக்க இக்குறியீடுகளைச் செங்குத்தாக அமைத்து இடச் சுருக்கம் பெறலாம்.

தனி எழுத்தாகப் புள்ளி

மெய் எழுத்துகளைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு மெய் யெழுத்தின் மீதும் தனித் தனியே புள்ளி அமைத்துப் பயன் படுத்துகிறோம். இதனால், தனித்தனியே பதினெட்டு மெய் யெழுத்துகள் தேவைப்படுகின்றன. இதற்குப் பதிலாக ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தின் பக்கத்தில் தனிக் குறியீடாக ஒரு சுழி யையோ (க9) அன்றி புள்ளியையோ (க) அமைப்பதன் மூலம் பதினேழு குறியீடுகளை (எழுத்துகளை அல்ல) குறைக்கலாம்.

ஐந்து குறியீடுகளைக் குறிக்கும் காலெழுத்து

சாதாரணமாக உயிர் நெடிலைப் பெற 'ா’ என்னும் காலெழுத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி வருகிறோம். அதே