பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

157

கலைச் சொல்லாக்கத்திற்கென தனி இதழ்!

தனிப்பட்ட ஒருவருடைய முனைப்போடு இத்துறையில் ஆர்வம் உள்ள மற்றவர்களின் முயற்சியும் இணைந்து செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வெங்கட சுப்பய்யர் என்பவருடன் இணைந்து தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’ என்ற இதழை 1916ஆம் ஆண்டில் சேலத்தில் ராஜாஜி தொடங்கினார். இதனாலெல்லாம் பெரும் பயன் விளையவில்லையென்றாலும் கலைச் சொற் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென தனி இதழ் தொடங் கிய சிறப்புக்குரியவராகிறார்.

கலைச் சொல்லாக்கத்தில் இதழ்களின் பங்கு

கலைச் சொல்லாக்கப் பணிகள் ஒரளவு விரைவு பெற்றதில் அறிவியல் இதழ் வெளியீடுகளும் புத்தக நிறுவனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ் (அக்காதெமி) வெளியிட்டுள்ள கலைக் களஞ்யம் பத்துத் தொகுதிகளும், குழந்தைக் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதி களும் தென் மொழிகள் புத்தக நிறுவனமும், கலைக்கதிர்", *யுனெஸ்கோ கூரியர் திங்களிதழ்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. கலைக்களஞ்சியங்களில் பெருமளவில் இடம்பெற்ற அறிவியல் கட்டுரைகளில் நூற்றுக் கணக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்கிக் கையாள வேண்டிய இன்றியமையாக் கடப்பாடு ஏற்பட்டது. அதனை பதிப்பாசிரியர் ம. பெரியசாமித் தூரன் கட்டுரையாளர்கள், துறை வல்லுநர்களின் உதவியுடன் சிறப்பாக நிறைவேற்றி, அறிவியலைத் தமிழில் திறம்படச் சொல்ல இயலும் என்பதை நிறுவிக் காட்டினார்

அடுத்து கலைச் சொல்லாக்கப் பணியில் தென்மொழிகள் புத்தக நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியை 1957ஆம் ஆண்டு முதல் ஆற் ர் வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள 280 தமிழ் நூல்களில் 70-க்கு மேற்பட்ட நூல்கள் அறிவியல் தொழில்நுட்ப நூல்களாகும். அறிவியல் துறையில் எத்தனைப் பிரிவுகள் உண்டோ அத்தனைப் பிரிவுகளைப் பற்றிய நூல் களையும் அது தமிழில் மொழிபெயர்ப்பாகவும் மூல நூலாகவும் வெளியிட்டுள்ளது. அவற்றுள் தமிழில் முதன் முறையாக வெளி வந்த மருந்தியல் போன்ற மருத்துவ நூல்களும் பற்றவைப்பு, உரு வமைக்கும் பொறி போன்ற தொழில்நுட்ப நூல்களும் அடங்கும்.

இவற்றிற்கென நூற்றுக் கணக் காண தமிழ்க் கலைச்சொற் கள் உருவாக்கிப் பயன்படுத்தட்பட்டுள்ளது. இதே நிறுவனம்