பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

214

ஒருமுகப்படுத்தி மொழித்துறை வல்லார்களைக் கொண்ட தமிழுலகக் குழு, இவற்றையெல்லாம் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, எதிர்கால நலனை மனதிற்கொண்டு, சில நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அம்முடிவு அறிவியல் ஊழிக்கேற்பத் தமிழைச் செழித்து வளர வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

மொழியைப் பற்றிய மனப்பான்மை மாறவேண்டும்

தமிழைப் பொருத்தவரை நமக்குள்ள பூஜா மனப்பான்மை மாறவேண்டும். நம் கருத்தையும் உணர்வையும் மற்றவர்கட்கு உணர்த்த நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட கருத்துணர்த் தும் சாதனமே மொழி. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் திறமையாகப் பணியாற்ற நாம் உருவாக்கிக் கொண்ட ஊழி யனே மொழி, வாழும் சூழலுக்கேற்ப, பணிகளின் தன்மை வேறு படும். அதற்கேற்ப பணியாளனின் போக்கும் செயற்பாடும் மாறு பட்டே அமையும்; அமைய வேண்டும்.

நத்தை வேகத்தில் நகர்ந்து வந்த சமுதாயத்தின் குறைந்த பட்சத் தேவைகளை மொழி நிறைவு செய்து வந்த சூழ்நிலை மாறி, ஜெட் வேகத்தில் விரைந்து முன்னேறிச் செல்லும் அறி வியல் சமுதாயத் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் மொழியில் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டே ஆகவேண்டும். அப் போதுதான் நாம் கால வேகத்தோடு இணைந்து விரைந்து முன் னேறிச் செல்ல முடியும், மாறாக பழமை உணர்வோடு தளர் நடை போடத் தொடங்கின் காலம் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னோக்கிச் சென்றுவிடும். காலம் யாருக்காகவும் எதற்காக வும் காத்திருப்பதில்லை. மொழியில் காலம் ஏற்படுத்த விழையும் மாற்றங்களை நாமும் இணைந்து விரைவுபடுத்துதலே அறி வுடைமை, அதையே காலமும் எதிர்பார்க்கிறது,

வறையறையோடு கூடிய சீர்மை

இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு விளங்கி வரும் தமிழ் மொழியில் எழுத்தில் சீர்மை காணும்போது மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் அப்பணியை மேற் கொள்ள வேண்டும். அவசரம் கூடாது. எனவே, மொழிச் சீர் திருத்த எல்லையறிந்து, செயல் முறைக் என வரையறை களோடு, மொழியியல் வல்லுநர்களைக் கொண்டு மொழிச் சீர் மையை நிறைவேற்றுதலே சிறப் :ாயமையும்.