பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

195

வருகின்றன. இத்தகைய படிகள் காலந்தோறும் எழுத்துகளில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றே அமைவனமாகும். இன்று நாம் காணும் எழுததுகள் அவ்வக் காலகட்டங்களில் ஏற்பட்ட மாற் றத்திற்குட்பட்டு வளர்ந்துவந்த எழுத்து வடிவங்களேயாகும்.

தமிழ் குகை எழுத்துகள்

தொல்காப்பியர் காலத் தமிழர்கள் தாங்கள் ஒலை போன்ற வைகளில் எழுதி வைப்பது அழிந்து போவதால், எக்காரணம் கொண்டும் என்றென்றும் அழியா நிலையில் அமையக்கூடிய வகையில் தாங்கள் எழுதுவதை நிலைநிறுத்த விரும்பினர். அதற் ென அவர்கள் கண்டறிந்த கருவிகளே கல்லெழுத்து முறையும் செப்பேட்டுச் செதுக்கலும். அவ்வாறு கற்களில் செதுக்கப்பட்ட எழுத்துகளே இன்றுவரை நிலைத்து நின்று பழந்தமிழர் கையாண்ட எழுத்து முறை எத்தகையது என்பதை இனங்காட்டி நிற்கின்றன. இத்தகைய பழங்கால கல்வெட்டு எழுத்துகள் சித்தன்னவாசல், அழகர் மலை, மாங்குளம் போன்ற தமிழகத் தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள குகைப் பகுதிகளிலே இன்றும் காணக்கிடைக்கின்றன. இவை குகை எழுத்துகள் (Cave script) என்றே கல்வெட்டு ஆய்வாளர்களாலும் மொழி யியல் அறிஞர்களாலும் அழைக்கப்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுமையும் கிடைக் கும் கல்வெட்டு எழுத்துகளிலே காலத்தால் மிக முற்பட்டதாகக் கருதப்படுபவை தமிழகத்தின் குகைகளில் காணப்படும் எழுத்து களே யாகும். இவைகளின் காலம் கி.மு. 300-க்கும் சற்று முன்ன தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதாவது இன்றைக்கு 230 ஆண்டுகட்கு முன்னதாக எழுதப்பட்டிருக்கலாம் எனக் கணி க்கப்படுகிறது. குகை எழுத்தும் தொல்காப்பிய இலக்கணமும்

இக்குகை எழுத்துகளில் காணப்படும் எழுத்து வடிவ அமைப்பு முறை தொல்காப்பிய இலக்கண நூலில் விவரிக்கப் படும் எழுத்து முறையை முற்றாக அடியொற்றி அமைந்துள்ள வைகளாகும். தொல்காப்பிய சொல் இலக்கண விதிமுறை களுக்கேற்பவே சொற்களும் சொற்றொடர்களும் அமைத் துள்ள ன.

தமிழா? பிராமியா?

. இக் குகை கல்வெட்டுகளின் சொல்லும் சொற்றொடரும் தமிழ் மொழி இலக்கணக் கட்டுக்கோப்புடன் விளங்கியபோதிலும்