பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118

குடியரசாக பெண் பித்தராகக் காரணம் பாரசீக மொழிச் சொல் லின் மரபான பொருளை உணர்ந்து தெளியத் தவறியதன் விளைவேயாகும். பாரசீக மொழிச் சொல்லான "மஸ்த்' என்ற சொல்லைத் தன் 'ருபய்யாத் கவிதை நூலில் உமர்கையாம் பல இடங்களில் பயன் படுத்தியிருந்தார்.

சமஸ்த்’ என்ற பாரசீகச் சொல்லுக்கு இறைமயக்கம்’ என்பது பொருளாகும். மாபெரும் சூஃபிகளாகிய மெய்ஞ்ஞானச் செல்வர்கள், ஞான உணர்வு மிக்கவர்களாக, இறை தியான வலிமையினால் எந்நேரமும் ஒரு வித இறை மயக்கமுடையவர் களாகவே இருப்பர் இத்தகைய சூஃபிக் கவிஞர்களை (Mystic poet) தமிழில் மஸ்தான்’ என்று அழைப்பது வழக்கம். மஸ்த்’ என்ற சொல்லினடியாகப் பிறந்தது மஸ் தான்’ என்ற சொல். குணங்கு டி மஸ்தான், வாலை மஸ்தான் போன்ற இஸ்லாமிய சூஃபி மெய்ஞ்ஞானிகளைப் போன்று விளங்கிய உமர்கையாம் தம் பாடல்களில் அதிகமாகக் கையாண்ட மஸ்த்’ என்ற பார சீகச் சொல்லின் மரபான உட்பொருளை அறிந்து கொள்ள இய லாத ஃபிட்ஜெரால்டு இறைமயக்கம்' என்பதை வெறும் மயக்கம் எனக் கொண்டு, மயக்கம் தருவது மதுவே எனக் கருதி, உமர் கையாமின் ைகயில் மதுக்கோப் ைப ைபயே தன் மொழி பெயர்ப் பின் மூலம் தந்து விட்டார். ம ன மயக்கம் தரும் மங்கையையும் கவிதையையும் இணைத்துக் கொண்டார். ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்த தேசி கவிநாயகம் பிள்ளை, உமர் கய்யாமை கவிதை, மது. மங்கைப் பித்தராகத் தம் உமர்கைய் பாம்" பாட லில் கூற, அதைப் படித்த கவிஞர் கண்ணதாசன், உமர்கைய் யாமை மதுக் கோப்பையிலேயே குடியிருக்கும் மடாக் குடிய ராகத் தம் பாடலில் வர்ணிக்கலானார் .

இவ்வாறு, ஒழுக்க சீலராகவும், உண்மையான முஸ்லிமாக வும், மெய்ஞ்ஞான உணர்வுமிக்க சூஃபிக் கவிஞராகவும் தத்துவ மேதையாகவும் திகழ்ந்த பாரசீகக் கவிஞர் உமர்கைய்யாமை, அவர் தம் பாடல்களில் பயன் படுத்திய “மஸ்த்’ என்ற சொல்லின் "இறைமயக்கம்’ எனும் மரபான பொருள் நுட்பத்தை அறியாது, சொல்லுக்குச் சொல் பெயர்ப்பாக மயக்கம்’ எனக் கொண்டதன் விளைவு நல்லொழுக்க சீலர் ஒருவர் தீய ஒழுத்திற்கோர் எடுத் துக் காட்டாக உலகு முன் நிற்கும்படியான நிலை உருவாகிவிட் டது. எனவே, மரபுப் பொருளுணர்ந்து வாக்கியம் முழுமையும் தரும் செய்தியை நிறைவாக மொழிபெயர்ப்பதே முறை.

சில தலைப்புகளை வேண்டுமானால் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு' என்ற முறையைக் கடைப்பிடித்து