பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

இலக்கியம் நெடுங்கதை வடிவில் படைக்கப்பட்டுள்ளனவா எனில் இல்லையென்றே கூற வேண்டியுள்ளது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் உண்மை களைப் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்கும் கூறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர் பெ. நா. அப்புசாமி. அவரது நூல் களில் சில கதைக்கான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் கூட அவை கதை இலக்கியமாக மலர்ந்தவைகளில்லை.

கதை என்ற சொல்லை கவர்ச்சியாக வைத்து என்.கே. வேலன் "காற்றின் கதை', 'கடலின் கதை', மின்சாரத்தின் கதை', 'பூமியின் கதை' எனத் தலைப்பிட்டு எழுதி வெளியிட்டி ருந்தாலும் அவை முழுக்கமுழுக்க அறிவியல் கதை இலக்கியங்கள் அல்ல ஆனால், சுவையான அறிவியல் செய்திகளைக் கூறவல் லனவாகும்.

சிறுவர் அறிவியல் நூல்களிலும் சின்னஞ்சிறு குழந்தைகளும் எளிதாகப் புரித்து கொள்ளும் வகையில் சுவையாக சிறுவர் நூல் களைப் படைத்தவர் வைத்தண்ணா ஆவார். கடலிலே மத்தாப்பு போன்ற இவரது நூல்களில் தலைப்புகளே கவர்ச்சியாக அமைந் தனவாகும். இவரைப்போன்ற சிறுவர்களி ன உள்ளம் ஏற்கும் வண்ணம் வேடிக்கையாக அறிவியல் செய்திகளைச் சொல்வதில் வல்லவராக விளங்கியவர் தி.ஜ ரா. ஆவார். இவரது'வண்ணாத் திப்பூச்சி’ எனும் சிறுவர் அறிவியல் நூலில் வண்ணாத்திப்பூச்சியே தன் கதையைச் சுவையாகத் தானே சொல்வதுபோல் அமைந்த தாகும் அறிவியல் செய்திதுளையே கற்பனைச் சிறப்புடனர்கதைப் போக்கில் சிறுவர்களின் மனநிலைக்கேற்ப, சிறுவர் அறிவியல் இலக்கியம் படைத்தவர் கல்வி கோபால கிருஷ்ணன் ஆவார். இவரது 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா' எனும் நூல் உலகம் எவ்வாறு தோன்றியது என்பதையும் உயிரினங்களின் தோற்ற மறுமலர்ச்சியையும் அழகுபட கூறும் சிறுவர் அறிவியல் இலக்கிய மாகும். அதேபோன்று ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றிய அறி வியல் உண்மைகளை "பாதாள உலகில்பறக்கும் பாப்பா’ என்ற சிறுவர் அறிவியல் இலக்கியம் மூலம் சுவையாக விவரித்துள்ளார். மேலும், மீ.லி.சபரி ராஜன், நா.வானமலை, ஆழி.வே. ராமசாமி, ழ்வண்ணன், அழ. வள்ளியப்பா போன்றோர்கள் விஞ்ஞான விஷயங்களை கதைப் போக்கில் கூறமுனைந்தாலும் அவைகளை முழுமையான அறிவியல் புனைகதைகளாக ஏற்க இயலவில்லை.

ஆயினும், அழ. வள்ளியப்பாவின் ரோஜாச் செடி" யும் வேளாண் அறிவியலைக் கூறும் ஈருசியின் நெய்க்காரப் பூந்தி,"