பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196

இதில் கையாளப்பட்டுள்ள எழுத்துவடிவம் பிராமி மொழி எழுத் துருவில் அமைந்தவையாக இருக்கலாம் என்ற கருத்து கல்வெட் டாளர்களிடையேயும் மொழியியலாளர்களிடையேயும் நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதிலும் மாறுபட்ட கண்ணோட்டங் கள் உண்டு.

கி.மு. 300 வாக்கில் அசோகன் வட நாட்டில் நிலைநிறுத் புதிய கல்தூண்களில் (ஸ்து பி) செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத் துருவும் தமிழ்நாட்டிலுள்ள குகை கல்வெட்டு எழுத்துருவும் ஒரே யாதிரியான சாயலைக் கொண்டிருப்பதால் இவை பிராமி’ எழுத்துகளாகவே இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் கருது கின்றனர். மற்றொரு சாரார், இந்திய மொழி எழுத்து வடிவங் களில் பலவும் பிராமி எழுத்துருவிலேயே அமைந்திருப்பதால் தமிழ் உட்பட இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் பிராமி மொழியை அடியொற்றியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொள்வது கி.மு. 800இல் அசோக ஸ்தூபிகளில் காணப்படும் பிராமி எழுத்துகளையே யாகும்.

அசோகர் ஸ்தூபிகளை நிறுவுவதற்கு முன்னதாகச் செதுக் கப்பட்டவைகள் தமிழ் குகை கல்வெட்டுகள். எனவே, அசோக 'ஸ்தூபிகளில் காணும் பிராமி எழுத்துகளை அடியொற்றி குகை தமிழ் கல்வெட்டுகளை பிராமி எழுத்துருவில் செதுக்கியிருப்பார் களா என்ற ஐயப்பாட்டை அவ்வளவு எளிதாகத் தள்ளி விட

முடியாது.

தமிழ் எழுத்திலிருந்து பிராமி எழுத்தா?

இந்திய மொழிகள் அனைத்துமே ஏதோ ஒரு இந்திய மொழி யின் எழுத்துருவை ஏற்று, அதன் அடிப்படையில் உருவாகி வளர்ந்து வந்துள்ளன என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் "சிந்தித்துப் பார்க்கும்போது இந்தியாவிலேயே காலத்தால் மிக முற்பட்டதாகக் கணிக்கப்படும் தமிழகக் குகைகளில் காணப் 'படும் எழுத்துகளின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கலாம் எனக் கருதுவதில் என்ன தவறிருக்க முடியும்?

அசோகர் சுவடுபடா தமிழகம்

மேலும், அசோகர் ஆட்சி மைசூர்வரை விரிந்த போதிலும்

அவரது ஆட்சியின் நிழல்கூட தமிழகத்திற்குள் பரவவில்லை. புத்தசமயத்தை இலங்கை முதலான வெளிநாடுகளில் பரப்பச்