பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த ஆட்டத்தின் நடுவராக ரதி-மன்மதன் ஜோடி இயங்குகின்றனர். அவர்கள் தாம் இவர் கட்குப் பார்வையாளர்கள், ஆதரவாளர்கள்! ஏன், வழிபடு தெய்வங்கள் கூட அவர்களேதான்! ‘மாலை மலரும் நோய்’ ஆன இந்தக் காதல் நோய்க்கு இவர்களே டாக்டர்களுமாவர்.

ஆமாம் காதல் என்பது ஒரு விசித்திரமான அனுபவமேதான்! ஏன் என்று கேட்கிறீர்களா?

நாம் முன்னம் சந்தித்த காதல் உறவினர்களை நெஞ்சில் கொணர்ந்து, நினைவுக்கு அவர்களது காதல் பாக்களைக் கொணருங்கள்:

“பொன்னென்பேன்-சிறு
பூவென்பேன்-காணும்
கண்ணென்பேன்-வேறு.
என்னென்பேன்?”

காதல் வயப்படுவதில் ஆண்தான் முந்திக் கொள்கிறான்.ஏனென்றால் அந்தப் பண்பு அவனுக்குத் தான் பெண்களைக் காட்டிலும் கூடுதலாகவும், முன்கூட்டியே வருவதாகவும் அமைகிறது. உடற் கூறு தரும் விளக்கம் இத்தகைய நிலையை ஆராயும். இந் நிலையில், பெண்களை அதாவது, தன் காதற் பாவையை நேரிடையாக வருணிக்க, நேரமும் காலமும் விளையும் விளையாட்டும் சம்மதம்

41