பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றுடன் போட்டி போடுகிற விதத்தில் "பாக்கெட் புக்ஸ் கிரைம் நாவல்ஸ்' என்ற பெயரில் சிறு வடிவப் புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன. அவை வேகமாக விற்பனையாவதாகவே தெரிகிறது.

பெரும்பாலும் இவ்வெளியீடுகள் அனைத்தும் அவசரம் அவசரமாக எழுதித் தள்ளப்பட்ட, விறுவிறுப்பும் ஜிலுஜிலுப்பும் நிறைந்த, குற்றங்கள் கொலைகள் செக்ஸ் விவகாரங்கள் மிகுந்த கதைகளையே கொண்டிருக்கின்றன. வாழ்க்கை யதார்த்தங்களைப் பிரதிபலிக்காத, கனவுகளும் கற்பனைகளும் நிறைந்த கதைகளும் அவற்றைப் - படிக்கிற முதிரா இளம் உள்ளங்களில் - பண்பும் பயிற்சியும் பெற்றிராத மனசுகளில் கிளர்ச்சியும் கிளுகிளுப்பும் மூட்டக்கூடிய பரப்பரப்பு எழுத்துக்கள்.

எப்பவாவது, அபூர்வமாக, இவற்றில் வித்தியாச மான படைப்புகள் வந்து விடுகின்றன. ஐம்பது வெளியீடு களில் மூன்று நான்கு இப்படி அமைந்து விடக்கூடும்.

மற்றபடி, வாசகர்களுக்கு போதைப் பொருளாக விளங்கக்கூடிய எழுத்துக்களே இம் மலிவு வெளியீடு களின் மூலம் சப்ளை செய்யப்படுகின்றன.

இந்த விதமான நாவல் பிரசுரங்கள் தமிழில் சுமார் எழுபது மாதம் தோறும் வெளிவருவதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொன்றும் பத்தாயிரக்கணக்கில் விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 112