பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதம் ஒரு நாவல் வெளியீட்டை தொடங்கியது. இது தமிழில் வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

தமிழில் புத்தகமாகப் பிரசுரமாகி ஒரளவுக்கு நல்ல கவனிப்பைப் பெற்றிருந்த நாவல்களை மாதம் ஒன்றாக வெளியிட்டது ராணி முத்து. பிரசித்தி பெற்ற எழுத்தாளர் களின் நாவல்கள்-அதிக விலையில் புத்தகமாக வெளி வந்தவை - முழுமையாக ஒரு ரூபாய் விலையில் தடிப்படவும், வாசகர்கள் ஆர்வத்தோடு வாங்கிப்

படிக்கலானார்கள்,

முழுமையாக, புத்தகத்தில் உள்ளபடியே தரப் படுவதாக ராணி முத்து விளம்பரப்படுத்தி வந்த போதிலும், பெரிய புத்தகத்திலிருந்து சுருக்கியும் குறைத்தும், சில பகுதிகளை நீக்கியும் தான் மாத வெளியீட்டைப் பிரசுரித்தது. இருந்த போதிலும், அதிக மாண விலையில் பெரிய புத்தகங்களை வாங்கிப் படிக்க மனமோ வசதியோ பெற்றிராத பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு ராணி முத்து வெளியீடுகள் லாபகர. மானவையாகத் தோன்றின.

"மலிவு விலைப் பிரசுரங்கள் எப்பவுமே வாசகர் களைக் கவர்ந்திழுக்கக் கூடியவை என்பது புத்தக வெளியீட்டாளர்கள் காலம் காலமாக உணர்ந்துள்ள உண்மை ஆகும்.

1950 களில் சக்தி வை. கோவிந்தன் ஒரு துணிகரமான முயற்சியில் ஈடுபட்டு, பல பிரசுரகர்

q

இ வாசகர்களும் விமர்சகர்களும் 108