பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் இ . #1 நல்லாயிருந்த பூனை அரைமணி நேரத்திற்குள் எப்படிச் செத் திருக்க முடியும்? - இவ்விதம் அவள் மனம் புலம்பியது. அறிவு ஆமோதித்தது. உணர்வுகள் குழம்பின.

என்ன செய்வது என்றே புரியவில்லை அவளுக்கு. தான் விருந்து நடத்திப் பெயர்பெற ஆசைப்பட்ட மடத்னத்துக்காகத் ளதன்னைத்தானே நிந்தித்துக் கொண்டாள் சாவித்திரி. உணவிலே விஷம். அங்கே சாவு இங்கே பலர் பலி சர்க்கரையிலும் விஷம் கலந்துவிட்டது-இந்த மாதிரிச் செய்திகள் பலவும் பத்திரிகைகளில் அவள் படித்தவை எல்லாம் இப்பொழுது அவளது உள்ள அரங்கிலே மின்னல் நாட்டியம் ஆடின. அவளுக்குப் பயம். அதிகரித்தது.

"சரி. நடக்கிறபடி நடக்கட்டும். வருவது வரட்டும்" என்று துணிந்தாள் சாவித்திரி, எனவே, வாய்மூடி மெளனியாக இருந்துவிட்டாள் என்று எண்ணவேண்டாம். சாவித்திரி நேர்மை யானவள். அவசியமிருந்தால் பொய் சொல்வாள். அதேமாதிரி, அவசியம் ஏற்படும்போது உண்மையை உள்ளபடி எடுத்துச் சொல்லவும் தயங்கமாட்டாள்.

விருந்து உண்டு மகிழ்ச்சியோடும். உண்ட களைப்போடும் சாய்ந்திருந்த சிநேகிதிகளிடம் உள்ளதை உள்ளபடி சொன்னாள் சாவித்திரி. பூனை செத்துக் கிடப்பதையும், பாயாசத்தில் விஷம் கலந்திருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டிருப்பதையும் அவள் விளக்கமாக எடுத்துரைத்தாள்.

"ஆங்" என்றாள் வசந்தா, “இதை அப்பவே சொல்லி யிருக்கப்படாதோ? நான் பாயசத்தை "டச்" பண்ணியிருக்கவே மாட்டேனே' என்று பதறினாள் பத்மா விருந்து வைக்க ஆசைப்பட்ட மூஞ்சியைப் பாரு' என்று முனங்கினாள் கர்வி ஜானகி, "ஐயய்யோ! மற்றவங்களை விட நான் தானே அதிக அளவு பாயசம் சாப்பிட்டேன் என்று திடுக்கிட்டாள் புதுப்பணக்காரி மீனாட்சி. ஒவ்வொருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றாள் சாவித்திரி.

"நிக்கிறதைப் பாரு முண்டம் மாதிரி, டாக்டருக்கு போன் பண்ணு, போன் இல்லைன்னா ஆளை அனுப்பு அர்ஜன்ட் என்று கத்தினாள் ஜானகி.

"எனக்கு மயக்கம் வருவது போலிருக்கே என்று தலையில் கைவைத்துக் கொண்டு சுவரிலே சாய்ந்தாள் வசந்தா. -