பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|வல்லிக்கண்ணன் क्ल क्ल45

உண்டாக்கியது அது பண்ணையார் கண் முன்னாலேயே அந்தப் பன்றி மறைந்துவிட்டது.

அது எப்படி மறைந்தது. எங்கே போயிருக்கும் என்று பண்ணையாருக்கும் புரியவில்லை. பன்றியைக் காண முடியாது நின்ற மாணிக்கத்துக்கோ அந்த அலறலே பயங்கரமாய், புரிந்து கொள்ள முடியாத மர்மமாய் உள்ளத்தை என்னென்னவோ பண்ணுவதாய் அமைந்துவிட்டது. -

அவ்விருவரும் அதைப்பற்றிப் பேசக்கூடத் தயங்கினர். இனம் புரிந்துகொள்ள முடிய்ாத ஒருவித அச்சம் இருவர் தேகத்தையும் நடுங்க வைத்தது.

மறுநாள் வழக்கம்போல் விடிந்தது. வழக்கமான அலுவல்கள் தொடங்கின. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களில் ஒருவன் மட்டும் வரவில்லை.

'திடீரென்று அவனுக்கு என்னவோ ஏற்பட்டுவிட்டது. உடம்பெல்லாம் ஒரே ரணம் தீ பட்டது போல் தேகம் வெந்து புண்ணாகியிருக்குது. நெஞ்சுக்கிட்டே பலமான காயம் வேறே. அதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தால் அவன் வாய் திறந்து பதிலே சொல்ல மாட்டேன்கிறான்" என்று ஒருவன் பண்ணையாரிடம் முறையிட்டான். -

சூரியன் பிள்ளைக்கு இந்தப் பேச்சு எதையோ தெளிவுபடுத்துவது போலிருந்தது. பூசாரி மாடசாமி சொன்னதும் வேறு நினைவில் எழுந்தது. அவர் மாணிக்கத்தையும் கூட்டிக்கொண்டு சுடலைமுத்து என்கிற அந்த நபரைக் காணச் சென்றார்.

அவரிடம் ஒருவன் வர்ணித்தானே அதே நிலையில்தான் அவன் கிடந்தான். பண்ணையாரைக் கண்டதும் அவன் கண்கள் ஆத்திரத்தோடும். பகைமையோடும், வெறியோடும் அவரை உற்று நோக்கின. அந்தக் கண்கள்.அவற்றின் பார்வை.பண்ணையாருக்கு தடிப்பன்றியின் நினைவு தானாகவே எழுந்தது. மிகத் தெளிவாக கண் முன் நிற்பதுபோல் - நிழலாடியது அத்தோற்றம்.

அவர் என்ன சொல்வது என்று புரியாதவராய் - என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவராய் - மேலும கீழும் பார்த்தபடி நின்றார்.