பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வல்லிக்கண்ணன்

அவள் யார்? அவள் எங்கிருக்கிறாள்? இதே கேள்விதான் அவர் மனசை அரித்தது. . -

"Tr குரல்-நான் எங்கிருந்து பேசினாலும்-உங்களுக்குப் பிடிபடுகிறதா?" என்று ஒரு தடவை அவள் கேட்டாள்.

"போன் மூலம் வருகிற குரலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் திறமை எனக்குப் போதாது என்றே தோன்றுகிறது. ஒரே குரல் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு தினுசாகத் தொனிப்பது போல் எனக்குப் படுகிறது" என்றார் அவர். -

"நான் எங்கிருந்து பேசுகிறேன் என்று ஆராய்ச்சி பண்ணும் ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள்" என்று அவள் ஒரு சமயம்

"ஏன்? என்று அவர் கேட்டதும் அவள் கலகலவெனச் சிரித்தாள். "நான் ஒரே இடத்திலிருந்து பேசுவதில்லை. எனக்கு அநேக சிநேகிதிகள் இருக்கிறார்கள். பலர் வீடுகளில் போன் இருக்கிறது. நான் லேடிஸ் கிளப்பிலிருந்தும் பேசுவது உண்டு என்றாள். "உன் பெயர் என்ன?" என்று அவர் விசாரித்தார். "என்ன பெயராக இருந்தாலென்ன, நடிகர் ஸார் - நாடகமே உலகம். உங்கள் தொழில் மட்டும்தானா நடிப்பு மயமானது? இல்லையே. உங்கள் வாழ்க்கை கூட நடிப்பு நிறைந்தது. தான். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பெயரால் ஒரே பெண்ணை அழைத்துப் பழக்கப்பட்டவர்தானே நீங்கள் என்னையும் ஏதாவது ஒரு பெயரால் கூப்பிடுங்களேன்'

"உனக்கென்று ஒரு பெயர் இருக்குமே. அது என்ன? அதைச் சொல்லேன்"

. "புஷ்பா என்று கூப்பிடுங்கள். நான் ஊம் என்று குரல் கொடுக்காவிட்டால் அப்புறம் கேளுங்கள்."

"அப்படியானால் உன் பெயர் புஷ்பா இல்லை?" "உங்கள் ஒளியால் கவர்ச்சிக்கப்படும் புஷ்பம் தான் நான் "இந்த விளையாட்டு உனக்கே நன்றாகப் படுகிறதா, புஷ்பா?"

"தேங்க்ஸ் மிஸ்டர் கானப்பிரியர்'