பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - வல்லிக்கண்ணன் - ཧྰུཾ་ཏྲྰཾ་ཧྰུཾ་ཏྲྰཾ| 24 இருந்தது. வேதனை இருந்தது. ஒரே வீட்டில் தங்கி இருக்க முடியவில்லை அவளால் சட்டம் அவளை வேட்டையாடியது. சமூக மதிப்பு அவளை விரட்டி அடித்தது.

அவளுக்குச் சர்கவும் பயமாக இருந்தது. எல்லோரும் அவளை அவமதித்தனர். அலட்சியம் செய்தனர். கேவலமாக நடத்தினர். அன்புக்காக ஏங்கிய அவளுக்கு அனுதாபம் காட்டக்கூடிய மனித உள்ளம் இந்தப் பரந்த உலகத்திலே ஒன்றுகூட இல்லை என்றே தோன்றியது. வெறுமையாகிவிட்ட அவளுடைய வாழ்வில், அவளுக்குத் துணையாகிவிட்ட தனிமை வேதனையாக மட்டும் தானா இருந்தது? சித்திரவதை செய்யும் சைத்தானாக இருந்தது. பயங்கரமான எதிர்காலத்தைக் கண்முன்நிறுத்தி அவளை அலற வைக்கும் பூதமாகத் தோன்றியது. அவளைப் பாடாய்ப்படுத்தும் சித்தப் பிரமையாக மனநோயாக மாறி வளர்ந்தது அது. அதிலிருந்து தப்புவதற்காகத்தான் - தன்னிலிருந்து தான்ே நழுவி ஓடுவதற்காகவே - அவள் ஆண்களைத் துரத்தித் திரிந்தாள். இம் முயற்சியில் காசு கிடைத்தது. எனினும் அதுவே அவளுடைய முக்கிய நோக்கமாக அமைந்ததில்லை. -

இதை அவள் "ஒரு மாதிரியாகச் சொல்லி முடித்தாள். நான் பாவிதான். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த உலகத்திலே நான் மட்டும் தானா பாபி? பணம் பெற்றிருப்பவர்கள். அதன் ஒளியினால் மற்றவர் கண்களைக் கூசவைத்துவிட்டு, எவ்வளவோ பாபங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை ஏன் யாரும் ஒதுக்கி வைக்கவில்லை? ஏன் வெறுப்பதில்லை?" என்று அவள் கேட்டாள்.

பதிலை எதிர்பாராமலே கேட்கப்படும் எவ்வளவோ கேள்விகளில் இவையும் சில என்று எண்ணினார் ஞாபி.

தங்களைப்போல் வாழக் கற்றுக் கொள்ளாதவர்களை வாழமுடியாதவர்களை வாழ விரும்பாதவர்களை எல்லாம் பாபிகள் என்றுதான் மற்றவர்கள் நினைக்கிறார்கள். சிந்திப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும், சிந்தனைக்குச் சீட்டுக் கிழித்து விட்டவர்களும் மலிந்த மனித ஜாதியிலே சிந்தனையாளன் கூட ஒரு பாபிதான்.

"நான் கூட ஒரு பாபிதான் என்று சொன்னார் ஞானப் பிரகாசம்.