பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தம்பி, நீ பரீட்சைகள் எல்லாம் எழுதிப் பாஸ் பண்ணி, பட்டங்கள் வாங்கியிருக்கலாம். ஓயாது புத்தகங்களைப் படித்துப் படித்து அறிவு விருத்தி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பதனாலே ஒண்ணும் நடக்காது. தபாலில் எழுதிப் போட்டு விடுவதனாலும் பிரயோசனமில்லை. பல பேரையும் நேரில் பார்த்துப் பேசிப் பழகணும். பெரிய மனிதர்கள் சில பேருடைய தயவு உனக்கு வேணும். இதெல்லாம் இல்லையென்றால், இந்த உலகத்தில் நீ நன்றாக வாழ முடியாது." - - -

"வேலையில்லாதவன்" என்ற பட்டத்தோடு உலாவிய இளையபெருமாளுக்கு அவனுடைய உறவினர் சூரியன் பிள்ளை அடிக்கடி கூறுகிற உபதேசம் இது. -

அவனுக்கு ஏதாவது உத்தியோகம் தேடிக் கொடுக்கவேண்டியது தமது கடமை என்று கருதிய "சமூகப் பெரிய மனிதர்" அவர். அவரால் உபதேசம் புரியத்தான் முடியுமே தவிர, உருப்படியாக எதுவும் செய்ய இயலாது என்பது அவனுடைய அபிப்பிராயம். -

ஆயினும், "அட. சூரியன் பிள்ளையால்கூட ஏதோ உதவி செய்ய முடியும் போல் தோணுதே' என்று இளையபெருமாள் எண்ண வேண்டிய சந்தர்ப்பமும் வந்து சேர்ந்தது.

ஒரு நாள் பிள்ளை அவர்கள் ஒரு கடிதத்தோடு வந்தார். "தம்பி, உனக்கு அக்கறை இல்லையென்றால் கூட நான் உனக்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக்