பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ - . . . . &

அல்லிக்கண்ணன்

தாமோதரனின் கடைசிப் பேச்சையும், புன்னகையையும் அறிந்தவுடனேயே, அவனுடைய உளளமே அவனைச் சுட ஆரம்பித்து விட்டது. ஒரு சில ரூபாய்களுக்கு ஆசைப் பட்டு-பதவியில் இருப்பவர்களின் தயவுக்கு ஆசை கொண்டுகடமையைச் செய்து காட்டத் துடித்த அதிகாரவர்க்கத்தின் ஆட்களது மயக்குப் பேச்சுக்களால் அறிவு கெட்டு, அவன் பெரிய தீங்கு புரிந்து விட்டான். அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டான். துடைத்து நீக்கிவிட முடியாத திரையிட்டு மறைக்கவும் முடியாத-ஒரு கறையை அவன் தனக்குத்தானே ஆக்கிக்கொண்டான். பிராயச் சித்தம் எதுவுமே இல்லாத கொடிய பாவத்தை அந்த அப்பாவி தன் அறியாத்தனத்தினால் செய்து முடித்துவிட்டான். இந்த உண்மை சிறிது சிறிதாக அவனுள் உதயமாகி அவனையே தகிக்கலாயிற்று.

தாமோதரனின் வாக்கை கெளரவிக்கும் பண்புடைய ஊரார்கள் அவர் சொன்னவற்றை வார்த்தைக்கு வார்த்தை சரியாக செயல் புரியத் துணிந்தார்கள். "கேசவனை விட்டு விடுங்கள். நீங்கள் அவனுக்கு எதுவும் செய்யக்கூடாது என்று தானே அவர் சொன்னார்? நாம் அவனுக்குத் தீயதும் எண்ண வேண்டாம் நல்லதும் செய்ய வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள் அவர்கள்.

கேசவன் எதிரே வந்தால் மற்றவர்கள் விலகிச் சென்றார்கள். அவன் சிரித்தால், யாருமே அவனை அறிந்தவராகக் காட்டி மீண்டும் புன்னகை புரியத் தயாராக இல்லை. அவனாகப் பேச்சுக் கொடுத்தாலும் கூட மற்றவர்கள் பேசாமல்-அவன் முகத்தைப் பார்க்காமலே-தங்கள் வேலைகளைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். "குடிக்கத் தண்ணீர் வேண்டும்" என்று வீட்டு வாசல்படி ஏறி அவன் கேட்டால் கூட வீட்டில் இருந்தவர்கள் அவனுக்குத் தண்ணீரும் தரவிரும்பவில்லை. "இல்லை" என்று வாயினால் சொல்லவும் முன்வரவுமில்லை. -

மனிதனாக வாழத் தவறிவிட்ட ஒருவனை-மனித உருவில் திரிந்தாலும், மனித மாண்பை மதிக்க மனமற்றுப் போன ஒரு அதமனை-தம்மில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள அவ்வூர் மக்கள் ஆசைப்படவில்லை. தங்களின் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு உத்தம மனிதனை துன்பத்துக்கும், தண்டனைக்கும், இருண்ட வாழ்வுக்கும் காட்டிக் கொடுக்க முன் வந்த ஒருவன்-திட்டமிட்டு