பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ಥ್ರೀ 93. அவன் வேதனையோடு திரும்பிப் பார்த்தான். அவனுடைய பிடி சோர்ந்து தளரவும், அவள் விலகி விழுந்தாள். பதறிக் கொண்டு. எழுந்து உட்கார்ந்தாள். அவள் பார்வை கையில் தடிஏந்தி வெறியனைத் தாக்கி நின்ற மனிதனைக் கவனித்தன.

முன்பு அவனைத் தெருவிலும், தோட்டத்திலும் அங்குமிங்கும் அநேக தடவைகள் சந்தித்திருப்பதாக அவளுக்குப் பட்டது. அதற்குமேல் எண்ணிக் கொண்டிருக்க அவகாசமில்லை அவளுக்கு. அங்கிருந்து தப்பி ஓடவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வு தூண்டியது. ஓடமுடியுமா ஓடினால் எங்கே போவது இருட்டில் பயம் இல்லாமல் போகமுடியுமா என்று சந்தேகக் குமிழிகள் முகிழ்த்தன அவள் உள்ளத்தில். -

வந்தவனை எதிர்க்கவேண்டும் என்று எண்ணி, அந்த எண்ணத்தை அவன் செயல்படுத்துவதற்கு முன்னதாகவே, தடியின் வேகமான வீழ்ச்சிக்கு எதிரே குறுக்கிட்டது. முரடனின் முகம். அந்த அறையைச் சமாளிக்க முடியாமல் அவன் நிலை குலைந்து விழுந்தான். -

அவன் செத்தானா, அல்லது மயங்கி விழுந்தானா என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாதவனாய், புதியவன் அவளைப் பார்த்தான். அவன் பார்வையிலே வெறி இல்லை. பெண்மையைச் சுவைக்க வேண்டும் என்ற பசி இல்லை. १ .

அது அவளுக்குப் புரிந்தது. ஆயினும் இவன் என்ன செய்வானோ என்ற உதைப்பு அவள் உள்ளத்தில் இல்லாமல் இல்லை. "ஊம், சீக்கிரம் இங்கிருந்து தப்பி ஓடுவதே நல்லது. இங்கேயே இருந்தால் என்னென்ன ஆபத்து வருமோ யாருக்குத் தெரியும்?" என்றான் அவன் அக்குரலில் உறுமலோ, கர்ஜனையோ, அதிகார அதட்டலோ இல்லை. - - w

அவளுக்குக் கால்கள் எழவில்லை. அவள் தேகம் பூராவும் படபடவென்ற நடுக்கம் பரவியிருந்தது. நிற்கமுடியாமல் அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று தோன்றியது. தானாகவே தனியாகச் செயல்புரியும் சாமர்த்தியம் எதுவுமே பெற்றிராத சிறியதொரு பிராணியைப் போல் ஆற்றல் இல்லாத குழந்தையைப் போல் - தான் அவளும் விழித்துக் கொண்டிருந்தாள். - .