பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ញុំ 199 நடந்தது என்ன? எனது நண்பன் நடராஜன் பல்லைக் ವಾಲ್ಡ தலையை நீட்டுகிறான். "வே, பயந்துட்டீரா? இஹிஹி" என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே கிடையாது. நான் ஒரு கோழை என்பதை அவன் கண்டுகொண்டானே அந்த ஆத்திரம் வேறு. "நேரே வாறதுக்கு என்ன கொள்ளை? நாதாங்கியை ஏன் குலுக்கினாய்?" என்று கத்தினேன்.

(வல்லிக்கண்ணன்

"டிராகுலா" என்ற புத்தகத்தைப் படித்த இரவில்-ஆ அதல்லவா பிசாசுக் கதை நானும் எழுதுகிறேன் கதை என்று இப்போது அநேகர் பயங்கரக் கதை எழுத முன்வந்துவிடுகிறார்களே. ஹ9ம்ப்

"டிராகுலா" வை நீர் படித்திருக்கிறீரா? ப்ராம் ஸ்டோக்கர் எழுதியது. கேள்விப்பட்டதுகூட இல்லை? அடாடா அவசியம் படிக்க வேண்டிய புத்தகமய்யா அது. ஆனால், பிரதர், நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். அதைப் பகல் நேரத்தில் படிப்பது நல்லது. அப்புறம் உம் இஷ்டம் i

நானும் துணிந்தகட்டை மாதிரி அதை ஒரு நாள் ராத்திரியிலே படிக்க உட்கார்ந்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் ரூம் எடுத்திருந்தேன். தனி வீடு. வீட்டைச் சுற்றிலும் புளியமரங்களும் நாலைந்து மாமரங்களும் நின்ற தோப்பு வீட்டு முன்னாலே மணல் படிந்தபாதை எதிரே ஆள் உயரத்துக்குத் திருகு கள்ளி, கைகளை உயர்த்திக்கொண்டு நிற்பது போலிருக்குமே, அது தான். எலெக்ட்ரிக் லைட் இல்லாத பிரதேசம் என்னிடம் பாட்டரி லைட்டும் கிடையாது. அரிக்கன் லாந்தர் தான். அதுக்குச் சிலசமயம் "காக்கா வலிப்பு" வந்துவிடும். குதிச்சுக் குதிச்சு, 'டபுக் கென்று அணைந்து போகும். அந்த விளக்கு வெளிச்சத்தில் டிராகுலா கதையைப் படிக்கலானேன். ஏண்டா படிச்சோம் என்று ஒரு வாரகாலம் வேதனைப்பட்டேன்.

பாதி படித்துக் கொண்டிருக்கும பொழுது என் தேகம் சிலிர்த்தது. ஜன்னலுக்கு வெளியே சிவ்வென்று ஒசை கேட்டது. பழந்தின்னி வெளவால் தனது பெரிய இறக்கையை படபடக்க வைத்துக் கொண்டு. அதோ மினுமினுப்பது அதனுடைய ஆழ்ந்த குழிகளில் அடங்கிய மைத்துளிக் கண்கள் தான். பழந்தின்னி வெளவால் வடிவத்தில் தானே ரத்தக் காட்டேறி வரும்? அது தான் பிரும்மராக்ஷஸ். டிராகுலா கதை கூட அதைப் பற்றியதே.