பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து நல்ல காரியம் |

திருப்பித் தருவதாகக் கேட்டு வாங்கு அல்லது, திருடியாவது படி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் அறிவின் பக்தர்கள். நான் கெஞ்சினேன். யாரும் பண உதவி பண்ணவில்லை. கடனாகக் கேட்டேன். தருவார் எவருமில்லை. பிச்சை எடுக்கவோ திருடவோ நான் தய்ாராக இல்லை. ஆகவே, இந்த வழியில் பணம சம்பாதிக்கத் துணிந்தேன் என்றும் அவள் சொன்னாள்.

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று விதிவகுத்துத் தந்தவர்கள் வந்த சமுதாயத்தில் வாழும் பெரியவர்கள் அபலைப் பெண் தேர்ந்துஎடுத்துக் கொண்ட இந்த வழியைப் பற்றிப் பாராட்டுரை வழங்குவார்களோ என்னவோ.

'பரீட்சை முடிந்த பிறகு அகல்யா அந்த விடுதிக்கு வருகிறாளா என்று அறியும் ஆவல் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. ஒருநாள் கொழுக்கட்டையிடம் அவளைப் பற்றிக் கேட்டேன். அவள் அங்கு வருவதில்லையாம் என்றுதான் சொன்னான்.

'பரீட்சைகளின் முடிவு வெளியான போதும் எனக்கு அகல்யாவின் நினைப்பே எழுந்தது. பாஸாகா விட்டால், மனமொடிந்து தற்கொலை செய்து கொள்ளக் கூடிய மாணவ மணிகளில் அவளும் ஒருத்தியாக மாறியிருப்பாளோ என்னவோ? இவ்வறெல்லாம் வீண்

எண்ணங்களை வளர்த்து அவதிப்பட்டது என் உள்ளம்.

"இரண்டு மாதங்களுக்குப்பிறகு தற்செயலாக நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள் பார்த்தும் பாராதது போல் போய்விடக்கூடும் என்று நான் நினைத்தேன். நானாகப் பேச்சுக் கொடுத்தாலும் அவள் பேசாமலே மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போய்விடுவாள் என்றும் எண்ணினேன். முன்பெல்லாம் அவள் அப்படிச் செய்வது தான் வழக்கம்.

"இருப்பினும் முயற்சி செய்வதில் நஷ்டம் எதுவும் இல்லை எனத் துணிந்து அவள் அருகில் போய், நமஸ்காரம், மிஸ் அகல்யா" என்றேன். ... " -

"அவள் என்னை கவனித்தாள். உற்று நோக்கிவிட்டுப் புன்னகை புரிந்தாள் நமஸ்காரம்" என்றாள். நான் பரீட்சையில் தேறிவிட்டேன். எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. நல்லவர்கள் சிலர் நடத்தும் ஒரு கம்பெனியில் கிளார்க் வேலை. இப்பொழுது நூற்றி