பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

ஒதுங்கி நின்ற ஒற்றை வீடு ஒன்று.

அதனுள் பயந்து ஒடுங்கிக் கிடந்த மனித உருவங்கள் இரண்டு. ஒன்று ஆண் ஒன்று பெண்.

அவன் கணவன். அவள் மனைவி. வாழ்க்கைத் துணைவர்கள்

கொடிய சோதனையாக எதிர்ப்படுகிற வாழ்க்கையில், தனித்தனியே பயந்து செத்துக் கொண்டிருக்கிற இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துணையாக முடியுமா என்ன?

எப்படியாயினும், அவள் தனக்குத் துணையாகத் தன் கணவனையே நம்பியிருந்தாள். அவள்?

வெளி உலகத்துப் பயங்கர ஓசைகளைக் காற்றெனும் தூதுவன் கொண்டுவந்து சுவரில் மோதி அடிக்கிறபோது- -

அலறல்களும் அபாயக் கூச்சல்களும் வெறி ஒலிகளும் விம்மி எழுந்து பரவிப் பாய்கையில், அவற்றில் ஒரு பகுதியை சன்னல் வடிகட்டி உள்ளே செலுத்தும் போது

அதே தெருவில் காலடி ஓசைகள் திடும்திடுமென ஒலிக்கும் போது

வழியோடு போகிற வீணர்களில் எவராவது விளையாட்டாகக் கைத்தடியைச் சுழற்றிச் சுவர் மீது அடிப்பதனாலோ, கல்லை எடுத்து ஒட்டின் மேலே வீசுவதனாலோ ஒலி எழுகிறபோது

இவ்வாறு இயல்புக்கு விரோதமான ஓசைகள் அலைமோதும் போதெல்லாம்.

அவன் உள்ளத்தில் பெரும் பயம் தாக்கியது. உடல் நடுங்கியது. அவன் கண்கள் வீட்டினுள்முட்டி மோதி மோட்டை எட்டிப் பிடித்து, சுழன்று தவித்து முடிவில் அவள்மீது படிந்தது.

அவள் ஒரு மூலையில் குறுகுறு வென்று குந்தியிருந்தாள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பயம் எனும் பண்பின் பரிணாமமாகக் காட்சி அளித்த அவளுடைய கண்கள் திகிலுற்ற சிறு பிராணியின் கண்களைப் போலவே மிதந்து புரண்டு கொண்டிருந்தன. வெளியே திம் திம் என்று சத்தம் எழுகிற போது