பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 83. கடிதம் எழுதினார். அதை பிரபல ஆங்கில தினசரிக்கு அனுப்பி வைத்தார். அந்த "லெட்டர் டு தி எடிட்ட'ரில், நகர வீதியின் அசுத்தம். அதனால் விளையக்கூடிய நோய் முதலியனபற்றிச் சுடாக எழுதியிருந்தார்.

அதைத் தபாலில் சேர்த்ததும், தன் கடமையைச் செய்த திருப்தி ஏற்பட்டுவிட்டது அவருக்கு.

அந்த நாய் அதே இடத்தில் தான் கிடந்தது.

"சமூக சேவை" செய்யும் மாதுசிரோமணிகள் இருவர் அவ்வழியாகப் போக நேர்ந்தது. அவர்கள் கூடை மாதிரியும், சட்டி மாதிரியும் இருந்த "வேனிட்டிபேக்"கைத் திறந்து எதையோ எடுத்து மூக்கருகில், பிடித்தபடி வேக நடைநடந்தார்கள் வாசனை படிந்த கைக்குட்டையால் வீசிக் கொண்டார்கள். "ரொம்ப டர்ட்டியாப் போச்சு' என்று முனங்கினாள் ஒருத்தி.

"சுகாதார வாரத்துக்கு ஒடியாடி உழைத்த அம்மையார் அவள். "தெய்வத் தன்மை போன்றது சுத்தம். சுத்தம் என்பதே தனி அழகுதான்" என்றெல்லாம் உபதேசித்தவள் அவள். இன்னும் உபதேசிக்காமலா இருப்பாள்?

.அவள் போனாள் م

அந்த நாய் உடல் அங்குதான் கிடந்தது.

பக்தி செய்வதைப் பிழைப்பாகக் கொண்டுவிட்ட இரண்டு உத்தமர்கள் நடந்தார்கள். மண்ணுலகத்து மோசமான வாடை அவர்கள் புலன்களைத் தாக்கியது. சிந்தனையைக் கிளறியது.

"நகரம் என்பது நரகத்தின் மறு உரு" என்றார் ஒருவர்

மற்றவர் ஆமோதித்தார். அதனால்தான் இராமலிங்கர் சொன்னார் - தேட்டிலே மிகுந்த சென்னையிலிருந்தால் என்னுளம்சிறுகுறும் என்று நாட்டின்ட நல்லதோர் நகர்ப்புறம் நண்ணினேன்."

"இந்த மனம் இருக்கிறதே. அதைக் குரங்கு என்றார்கள். பேய் என்றார்கள். நான் நினைக்கிறேன் - அதைக் கழுகு என்று கூடச் சொல்லலாம். "கழுகு அசுத்தங்களையும் ஆபாசங்களையும் உணர்ந்தறிந்து நாடுவது போலவே, மனமும் பறந்து பாய்ந்து