பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

இல்லாததை எல்லாம கற்பனை செய்து கொண்டு கதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்'

"இல்லாதது ஒன்றுமில்லை. இன்று காலையில் உங்களுடன் காரில் ஒருத்தி வந்தாளா இல்லையா? செம்பட்டு போர்த்திய சொகுசுக்காரி. தேவமோகினி படத்தில் "என் இச்சைக்குரிய பச்சை மயிலே துள்ளி ஓடும் புள்ளி மானே! கூவத் தெரியாக் குயிலின் குஞ்சே!" என்றெல்லாம் நீங்கள் புலம்பினர்களே அந்த உளறலை ஏற்றுக்கொண்டு சொக்கிப்போன குரங்குதானே இன்று உங்கள் அருகில் இருந்தது? சொல்லுங்கள் corir

"பொறாமைப் பிண்டம்' என்று முணுமுணுத்துவிட்டு போனை வைத்தார் கானப்பிரியன். இவள் யார்? யாராகத்தான் இருப்பாள் இவள்? ஒரே கேள்வியை ஒன்பது விதமாக விட்டெறிந்து வில்லடிக்கத் தொடங்கியது அவர் மனம் அவள் யாராக இருக்கும் என்பது தான் அவருக்குப் புரியவில்லை.

"அவள் யாராகவும் இருந்து தொலையட்டும் என்னைவிட அவளுக்குப் பல செளகரியங்கள் இருக்கின்றன. அவள் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறாள். அது மட்டுமல்ல, என்னைஅடிக்கடி பார்க்கும் வசதியும் அவளுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது" என்று எண்ணினார் அவர்,

"செச்சே! நாம் அறியாமலே, நமக்குத் தெரியாத நபர் ஒருவர் நம்மைக் கண்காணித்துத் திரிவது நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் இல்லைதான்" என்ற நினைப்பு அவர் உள்ளத்தில் மிதந்தது. 'ப்சர் அதுக்கு நாம் என்ன பண்ணுவது?” என்று அலட்சியப்படுத்த முயன்றார் அவர் ஆயினும் எவளோ ஒருத்தியான அவளை அப்படி அலட்சியப் படுத்திவிட இயலவில்லை அவரால்.

அவள் திடுமெனப் பிரவேசித்த பூதம்போல்தான் தோன்றினாள் அவருக்கு ஒரு நாள் திடீரென்று டெலிபோன் அவரை அழைத்தது. வழக்கமான அசிரத்தையுடன் காணப்பிரியன் பேசத் தொடங்கினார். ஆனால் காதைத் தொட்ட பேச்சின் சுவை அவர் உள்ளத்தில் மகிழ்வை விதைத்தது. புகழ்ந்து பேசப்படுகிறவருக்கும் புகழ் மொழி கசந்தா கிடக்கும்? அதிலும், யார் எனத் தெரியாத அந்நியர்-அதிலும் ஒரு பெண் அவள் யுவதியாகத்தான் இருக்க வேண்டும்-பேசும்