பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 靈 33 முடியும்? தலையிலே எண்ணெய்தான் தேய்க்க முடியும் தலை எழுத்தைக் கண்டால் அழிச்சு எழுத முடியுமா?" என்று அவள் முனங்கினாள்.

செல்லையா நண்பர்களின் நல்மதிப்பு வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. தான் தப்புவதற்கு நண்பனைக் காவு கொடுக்கவும் அவன் தயங்க மாட்டான். அப்பாவி நன்பன் ஒருவன் ளஅகப்பட்டுக்கொண்டால், தப்பிவிட்ட அவன் கை கொட்டிச் சிரித்து மகிழ்ப் பின் வாங்கவும் மாட்டான்.

ஒரு சமயம் அப்படித்தான் ஆயிற்று. ஒரு தோப்பில் மாமரங்களில் குலைகுலையாகக் காய்கள் தொங்கின. அவற்றின் பசுமை பையன்களை ஆசைகாட்டி அழைத்தன அதனால், கற்கள் பறந்தன. காய்கள் விழுந்தன. காய் அடித்துத் தின்னும் சுவாரஸ்யத்தில் பையன்கள் தோப்புக் காவல்காரன் வந்ததைக் கவனிக்கவில்லை. முதலில் கவனிக்க நேர்ந்த செல்லையா "டெடேய் ஒடுங்கள்" என்று கூவிக்கொண்டு விழுந்தடித்து ஒடவும்தான் மற்றவர்கள் கால்களிலும் உணர்வு பிறந்தது. எனினும் ஒருவன் அகப்பட்டுக் கொண்டான். காவல்காரன் அவ்னை மிரட்டவும், மற்றப் பையன்களுக்கு பயம் காட்டவும் ஒரு வேலை செய்தான். அச்சிறுவனின் கைகளைக் கயிற்றினால் கட்டி, அவனை ஒரு கிணற்றினுள் இறக்கினான். தண்ணீர் அதிகம் இல்லாத கிணற்றுக் குள்ளே அந்த "மனித வாளி இறங்கியது: அலறி ஓலமிட்டுக் கொண்டே இறங்கியது. அலறி ஐயோ ஐயோ, என்னை உள்ளே போட்டுவிடாதே மேலே துக்கு என்று பயந்து. நடுங்கிக் கதறினான் பையன். -

அந்த அலறல் கேட்டு எல்லாச் சிறுவர்களும் அங்கே வந்து கூடினார்கள். அவனை விட்டுவிடும்படி சிலர் கெஞ்சினார்கள். "வாத்தியார் ஐயர் மகன் தானே இந்தப் பையன்?" என்று தோப்புக்காரன் கேட்டான். "ஆமாம்" என்றனர் சிலர். அப்போ எல்லாரும் கத்துங்க. "ஐயரே ரெண்டரே. அமுக்கிப் புடிச்சா ஒண்ணரே. உம். கத்துங்கள்' என்றான் காவல்காரன். அவனுக்கு அது தமாஷாக இருந்தது. .

பயந்தனர் சிலர் பரிதாபப்பட்டனர் பல்ர். செல்லையா தான் முதல் குரல் கொடுத்தான். தயங்கித் தயங்கி நாலைந்து குரல்கள் மெதுவாக இணைந்தன. பிறகு எல்லாக் குரல்களும் கூவின. அதுவரைஅந்தச்