பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஜ மனோபாவம் "அப்படியானால் என்னை ஏன் ஆஸ்பத்திரியிலே சேர்க்க மறுக்கிறே? அங்கே நல்ல டாக்டர்கள் இருக்கிறார்கள். அருமையாகக் கவனித்து மருந்தெல்லாம் கொடுக்கிறார்கள்" என்று அடுக்கினார் பிள்ளை.

ஆகையினால் பால்வண்ணம் பிள்ளையை 'தரும

ஆஸ்பத்திரியில் சேர்ப்பது தவிர வேறு வழியில்லை என்று ஆயிற்று.

விசாலாட்சி அம்மாள் தன் கணவனின் ஆசைக்கு பங்கம் விளைவிக்க விரும்பவில்லை.

அதனால் ஒரு குறைவுமில்லை. ஆஸ்பத்திரியில் நன்றாகத்தான் கவனித்தார்கள். நல்ல மருந்து, நல்ல போஷிப்பு மணிப் பிரகாரம் மருந்தும், வேளை தவறாமல் உணவும் கிடைத்தது. ரொட்டி பால், பழங்கள் எதற்கும் குறை கிடையாது. பிள்ளைக்கு ரொம்பவும் திருப்தி,

பால்வண்ணம் பிள்ளைக்கு நிச்சயமான சில நம்பிக்கைகள் இருந்தன. வாழ்வில் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் உய்விக்கக் கூடிய மதம் ஒன்றே ஒன்று தான் உண்டு. அது பணம் தான்.சர்வ வியாபகமான, சர்வ வல்லமை பொருந்திய, சர்வ சமய நாதனான கடவுள் ஒருவனே உண்டு. "அப்பன் பணநாதன் தான். அவன்'. நினைத்ததை எல்லாம் எய்திட வைக்கும் சகல இன்பங்களையும் பெற்றுத் தந்திடும்-எவரையும் ஏவல் கொள்ளும்-அற்புதங்கள் பலவும் செய்யும் மந்திரம் போன்ற ஒரு சக்தி இந்த உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு அதுதான் பணம் இவ்வாறு நம்பி, பணபக்தி பண்ணி, பணத்தைச் சேர்த்துவைக்கும் ஆசை மிகுதியும் பெற்றவராய் விளங்கினார் அவர்.

முதலில் கொஞ்சகாலம் விசாலாட்சி தாராளமாகச் செலவு செய்ததை அவர் ஆட்சேபிக்காததன் காரணம், "நாம் பிழைத்து விடுவோம்" என்ற நினைப்பு அவருள் குடியிருந்தது தான். பிறகு அவர் தம்மை ஆஸ்பத்திரியில் சேர்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்ததிலிருந்தே நாம் பிழைப்பது சந்தேகம்தான் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டு விட்டது என்பது விசாலாட்சிக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது.

எனினும், அப்படி ஒரு சந்தேகம் தன்னுள் முளைகட்டி, முகிழ்த்தெழுந்து, குருத்து விட்டு, இலைகள் விரித்துப் பெரிதாகிக்